Published:Updated:

``அதிருப்தி எம்எல்ஏ-க்கள் விரும்பினால் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்!"- உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

முதல்வர் பதவியை உடனே ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

``அதிருப்தி எம்எல்ஏ-க்கள் விரும்பினால் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்!"- உத்தவ் தாக்கரே

முதல்வர் பதவியை உடனே ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்தார். ஆட்சி அமைத்த நாளிலிருந்து பா.ஜ.க இதுவரை மூன்று முறை ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் இம்முறை மிகவும் தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தி சிவசேனாவிலேயே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. சிவசேனாவைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்களுடன் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்த சிவசேனா மேற்கொண்ட முயற்சி பலனலிக்காத நிலையில், இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே ஃபேஸ்புக் மூலம் நேரடியாக உரையாற்றினார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

``இந்துத்துவா எங்களது உயிர்மூச்சு. சிவசேனாவிடமிருந்து இந்துத்துவாவை பிரிக்க முடியாது. இந்துத்துவாவிற்கு யார் என்ன செய்தார்கள் என்று பேச இது நேரம் இல்லை. பாலாசாஹேப் தாக்கரேவின் இந்துத்துவா கொள்கையை சிவசேனா முன்னெடுத்துச்செல்கிறது. நான் முதல்வராகக்கூடாது என்று காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சி சொன்னால் அது வேறு. ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியின் கமல்நாத், `நான் முதல்வராக வேண்டும்' என்று கூறுகிறார். என்னுடைய சொந்தக் கட்சியினரே என்னை விரும்பாத போது நான் என்ன சொல்வது? எந்த எம்.எல்.ஏ ஆவது நான் முதல்வராக இருக்கவேண்டாம் என்று விரும்பினால் உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்யத்தயாராக இருக்கிறேன். அதற்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும் உடனே பதவி விலகிவிடுவேன். எனது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்கிறேன். சிவசேனா தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். நான் யாரது இருக்கைக்காகவும் போட்டியிடவில்லை. நான் முதல்வரானது ஒரு விபத்து. நான் பால் தாக்கரே மகன் எனக்கு பதவி முக்கியமல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற எம்.எல்.ஏ-க்கள் சிலர் எங்களை தொடர்பு கொண்டு தங்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்தார். கட்சியினரை சரியாக சந்தித்துப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் உத்தவ் தாக்கரே பதலளித்தார். ``கடந்த சில மாதங்களாக கட்சியினரைச் சந்தித்துப் பேச முடியாமல் போனது உண்மைதான். உடல்நலக்கோளாறு, ஆபரேஷன் காரணமாக சந்திக்க முடியவில்லை. இப்போது சந்தித்துப் பேச ஆரம்பித்திருக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

இன்று இரவு சரத் பவார் தன் மகள் சுப்ரியா சுலேயுடன் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று இந்தப் பிரச்னை குறித்து உத்தவ் தாக்கரேவுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக சரத் பவார்தான் முக்கிய காரணமாக இருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism