Published:Updated:

சிக்கிய சிவசேனா நிர்வாகி யஷ்வந்த் ஜாதவ்-வின் டைரி... யார் அந்த `மாதோஸ்ரீ’

யஷ்வந்த் ஜாதவ்

மும்பை மாநகராட்சியின் முன்னாள் நிலைக்குழுத் தலைவரின் டைரி ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறது. இந்த டைரியில் மாதோஸ்ரீக்கு ரூ.2 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிய சிவசேனா நிர்வாகி யஷ்வந்த் ஜாதவ்-வின் டைரி... யார் அந்த `மாதோஸ்ரீ’

மும்பை மாநகராட்சியின் முன்னாள் நிலைக்குழுத் தலைவரின் டைரி ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறது. இந்த டைரியில் மாதோஸ்ரீக்கு ரூ.2 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
யஷ்வந்த் ஜாதவ்

மும்பை மாநகராட்சியில் நிலைக்குழுத் தலைவராக இருந்தவர் யஷ்வந்த் ஜாதவ். சிவசேனாவைச் சேர்ந்த இவர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜாதவ் வீட்டில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங்குக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர்.

ஜாதவ் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்துகொண்டு செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித்துறையின் ரெய்டில் ஜாதவ் வீட்டிலிருந்து இரண்டு டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த டைரிகளில் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, என்ன பரிசு கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் பல கோடி ரூபாய் பரிமாற்றம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

`மாதோஸ்ரீ’ என்ற பெயருக்கு ரூ.2 கோடி பணமும், ரூ.50 லட்சம் மதிப்பு கைக்கடிகாரங்களும் கொடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜாதவிடம் கேட்டதற்கு, தன் தாயாருக்கு அவற்றைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தன் தாயாரின் பிறந்தநாளையொட்டி ரூ.50 லட்சத்துக்கு கைக்கடிகாரம் வாங்கி அதை விநியோகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல குடிபாட்வா தினத்தன்று தெரிந்தவர்களுக்கு வழங்குவதற்காக தன் தாயாருக்கு ரூ.2 கோடி கொடுத்ததாக ஜாதவ் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இக்பால் சிங்
இக்பால் சிங்

ஆனால் வருமான வரித்துறையினர் ஜாதவ் பதிலில் திருப்தியடையவில்லை. `மாதோஸ்ரீ’ என்பது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லம். உத்தவ் தாக்கரேவுக்குத்தான் அவற்றைக் கொடுத்தாரா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரித்துவருகின்றனர். ஜாதவ், மாநகராட்சி ஒப்பந்ததாரர் பிமல் அகர்வால் என்பவரின் நியூஸ்வெக் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் மூலம் பைகுலாவில் 31 வீடுகளை வாங்கியிருக்கிறார். அதோடு ஒரே கட்டடத்தில் ஐந்து பேர் வீடு வாங்க தலா 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகப் பணம் கொடுத்துள்ளார். சில வீடுகள் வாங்க பணம் ஹவாலா முறையில் கொடுக்கப்பட்டிருப்பதையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஒரே கட்டடத்தில் ஜாதவ் 41 வீடுகள் வாங்கப்பட்டத்தில் வருமான வரித்துறை சந்தேகம் அடைந்துள்ளது. ஜாதவ் பழைய கட்டடத்தில் ஆயிரம் வீடுகள் வரை வாங்கியிருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங்குக்கு வருமான வரித்துறையும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில் மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் யஷ்வந்த் ஜாதவ் பணியில் இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தகவல்களை இம்மாத இறுதிக்குள் வழங்க அவகாசம் கொடுக்கும்படி மும்பை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பாலிடம் கேட்டதற்கு ``எனக்கு வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்குத் தக்க பதில் கொடுக்கப்படும். இது இலாகா மட்டத்திலான ஒன்று. அரசியல் சண்டையை அரசியல் மட்டத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அதிகாரிகளை இழுக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism