Published:Updated:

குஜராத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏக்நாத் ஷிண்டே; காரிலிருந்து குதித்து தப்பித்த சிவசேனா எம்எல்ஏ!

கைலாஷ் பாட்டீல்

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் காரில் குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு எம்.எல்.ஏ மட்டும் டோல்கேட் அருகே காரிலிருந்து குதித்து தப்பித்து வந்துவிட்டார்.

குஜராத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏக்நாத் ஷிண்டே; காரிலிருந்து குதித்து தப்பித்த சிவசேனா எம்எல்ஏ!

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் காரில் குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு எம்.எல்.ஏ மட்டும் டோல்கேட் அருகே காரிலிருந்து குதித்து தப்பித்து வந்துவிட்டார்.

Published:Updated:
கைலாஷ் பாட்டீல்

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40-க்கும் அதிகமானோரை மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க-வின் துணையோடு குஜராத்துக்கு கடத்திச் சென்றார். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சட்டமேலவைத்தேர்தலில் வாக்களித்தப் பிறகு முடிவுக்காக காத்திருந்தனர். அந்த நேரம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ-க்களிடம் தானேவில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி மூன்று பெரிய கார்களில் ஏற்றினார். ஆனால், கார் தானே செல்லாமல் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள வசாயைத் தாண்டி குஜராத் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

கார் எங்கு செல்கிறது என்று கேட்டதற்கு முக்கியமான ஒருவரை பார்க்கப் போவதாக ஷிண்டே தெரிவித்திருக்கிறார். இதனால் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து கார் டோல்கேட் ஒன்றின் அருகில் நின்றபோது கைலாஷ் பாட்டீல் என்ற எம்.எல்.ஏ காரை திறந்துகொண்டு வெளியில் குதித்துவிட்டார். அவரைப் பிடிக்கப் போனால் தேவையில்லாத சிக்கல் ஏற்படும் என்று கருதி எஞ்சிய எம்.எல்.ஏ-க்களுடன் கார் குஜராத் சென்றுவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைலாஷ் பாட்டீல்
கைலாஷ் பாட்டீல்

காரிலிருந்து குதித்த கைலாஷ் பாட்டீல் எம்.எல்.ஏ இது குறித்து ஊடகங்களிடம் பேசியபோது, ``கார் வசாயைத் தாண்டி குஜராத் நோக்கிச் சென்றதால் சந்தேகமடைந்தோம். அந்த நேரம் டோல்கேட் ஒன்று வந்தது. உடனே டிரைவரிடம் சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கூறி காரை நிறுத்தச்சொன்னேன். பின்னர் காரிலிருந்து வெளியில் குதித்து இருட்டுக்குள் தப்பி சென்றுவிட்டேன். அங்கிருந்து இரு சக்கர வாகன ஓட்டியிடம் லிஃப்ட் கேட்டு சிறிது தூரம் வந்தேன். அங்கிருந்து மும்பை நோக்கி 4 கிலோமீட்டர் நடந்து சென்றேன். பின்னர் லாரி ஒன்றில் லிஃப்ட் கேட்டு ஏறி அதிகாலையில் தகிசர் வந்தேன். அங்கிருந்து ரயில் மூலம் மும்பை சென்று... நேராக கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து நடந்த சம்பவத்தை தெரிவித்தேன்" என்று கூறினார்.

காரிலிருந்து குதித்து தப்பிவந்து தனது விசுவாசத்தை காட்டிய எம்.எல்.ஏ-வை உத்தவ் தாக்கரே வெகுவாகப் பாராட்டினார். இது போல் மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் திரும்ப வருவார்கள் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism