Published:Updated:

``நாங்கள் போராட்டக்காரர்கள்; உயிருள்ளவரை சிவசேனாதான்” - ஜாமீனில் வெளிவந்த எம்.பி சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத் சிறையிலிருந்து விடுதலை

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

``நாங்கள் போராட்டக்காரர்கள்; உயிருள்ளவரை சிவசேனாதான்” - ஜாமீனில் வெளிவந்த எம்.பி சஞ்சய் ராவத்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Published:Updated:
சஞ்சய் ராவத் சிறையிலிருந்து விடுதலை

சிவசேனா ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் ராவத், கடந்த ஆகஸ்ட் மாதம் பண மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். சஞ்சய் ராவத் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டார். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சஞ்சய் ராவத்துடன் அவரின் உறவினர் பிரவீன் ராவத் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இருவரும் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த மாத மத்தியில் விசாரித்து முடிக்கப்பட்டது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழக்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே, குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரையும் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். `இந்த வழக்கில் இரண்டு பேரும் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது’ என்று கருத்து தெரிவித்தார் நீதிபதி. அதோடு, ``வெறும் சிவில் தகராறுகளை பண மோசடி என்றோ அல்லது பொருளாதாரக் குற்றம் என்றோ முத்திரை குத்தி அப்பாவியைக் கைதுசெய்ய முடியாது. ஆவணங்களை விரிவாக ஆய்வுசெய்ததில் பிரவின் ராவத் சிவில் வழக்குகளுக்காகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சஞ்சய் ராவத் எந்தவிதக் காரணமும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது அப்பட்டமான உண்மை” என்று நீதிபதி தெரிவித்தார். ஜாமீன் வழங்கப்பட்டவுடன், சஞ்சய் ராவத் நீதிபதியைப் பார்த்து கைகூப்பி வணங்கி, ``மிக்க நன்றி’’ என்று தெரிவித்தார்.

``நாங்கள் போராட்டக்காரர்கள்; உயிருள்ளவரை சிவசேனாதான்” - ஜாமீனில் வெளிவந்த எம்.பி சஞ்சய் ராவத்

அமலாக்கப் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் உத்தரவை வெள்ளிக்கிழமை வரை அமல்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அந்தக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனே மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து, ஜாமீனுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதி, இரு தரப்பினரின் கருத்தையும் கேட்காமல் இதில் தன்னால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். `தீர்ப்பு நகலை நான் பார்க்கவில்லை. எந்த அடிப்படையில் ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதே போன்று எந்த அடிப்படையில் நீங்கள் மேல் முறையீடு செய்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனவே, இரு தரப்பு கருத்துகளையும் கேட்காமல் எப்படி என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியும்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதோடு இந்த மனு மீதான விசாரணையை இன்றைக்குத் தள்ளிவைத்தார். மற்றொருபுறம், சஞ்சய் ராவத்தைச் சிறையிலிருந்து விடுவிக்க அவரின் வழக்கறிஞர் அவசர அவசரமாக வேலை செய்தார். இதையடுத்து நேற்று மாலையில் சிறையிலிருந்து சஞ்சய் ராவத் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் ராவத் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்றவுடன் ஆர்தர் ரோடு சிறை, பாண்டூப்பில் உள்ள சஞ்சய் ராவத் இல்லம், தாதரில் சிவசேனா பவனில் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் கூடினர்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், சிவசேனா தொண்டர்கள் பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் பேட்டியளித்த சஞ்சய் ராவத், ``நாங்கள் போராட்டக்காரர்கள், தொடர்ந்து போராடுவோம். உயிருள்ளவரை தொடர்ந்து சிவசேனாவில் இருப்பேன்” என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சுஷ்மா, ``புலி வந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார் வெளியிட்டிருக்கும் செய்தியில், `புலி கூண்டிலிருந்து வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.