Published:Updated:

பத்திரிகை ஆசிரியர் அவதாரமெடுத்த தாக்கரே: காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்கட்சிகள்மீது சாடல்!

உத்தவ் தாக்கரே

மீண்டும் பத்திரிகை ஆசிரியராகியிருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

பத்திரிகை ஆசிரியர் அவதாரமெடுத்த தாக்கரே: காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்கட்சிகள்மீது சாடல்!

மீண்டும் பத்திரிகை ஆசிரியராகியிருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக இருந்த சஞ்சய் ராவத் எம்.பி-யை அமலாக்கப்பிரிவு இந்த மாதத் தொடக்கத்தில் கைதுசெய்தது. இதனால் சாம்னா பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு வெளியான தலையங்கத்தில் உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ``மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின்போது எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மிகவும் கவலையளிக்கும்விதமாக இருந்தது. போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை போலீஸார் தாக்கியதோடு அவர்களைக் கைதுசெய்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கு கேள்விக்குறியதாக இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்துக்கு இது மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்று.

பத்திரிகை ஆசிரியர் அவதாரமெடுத்த தாக்கரே: காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்காத எதிர்கட்சிகள்மீது சாடல்!

அமலாக்கப்பிரிவைப் பயன்படுத்தி ஓர் அரசைக் கவிழ்த்துவிட்டு புதிய அரசை அமைத்திருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்னைகள் பெரிய அளவில் இருக்கும்போது அது பற்றிக் குரல் கொடுக்கவிடாமல் அமலாக்கப் பிரிவைப் பயன்படுத்தி ஒடுக்கியிருக்கின்றனர். கால்களுக்கு இடையில் வாலைச் சுருட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர்கள் இதை மனதில்கொள்ள வேண்டும். துணை ஜனாதிபதித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அற்பக் காரணங்களுக்காக வாக்களிக்கவில்லை" என்று சாடியிருக்கிறார்.

அமலாக்க பிரிவு
அமலாக்க பிரிவு

மேலும், ``மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவின் செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ராகுல் காந்தி, சோனியா காந்தியையும் அமலாக்கப் பிரிவு குறிவைத்திருக்கிறது. ஆனாலும், பணவீக்கம், வேலையில்லா திண்ட்டாட்டத்துக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடுகின்றனர். எதிர்க்கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து பா.ஜ.க-வுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். பா.ஜ.க-வின் பலம் எதிர்க்கட்சிகள் உடைவதில்தான் இருக்கிறது. இது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாடமாகும். யாராவது பயமில்லாதவர்கள் இருந்தால் இந்தப் பாடத்தைப் பின்பற்ற வேண்டும்" எனக் காட்டமாக தலையங்கம் எழுதியிருக்கிறார் தாக்கரே.