Published:Updated:

``ஜி-20 லோகோவில் தாமரை; பாஜக வெட்கமின்றி விளம்பரம் செய்கிறது!" - காங்கிரஸ் சாடல்

ஜி-20 லோகோ

``மோடியும், பா.ஜ.க-வும் வெட்கமின்றி விளம்பரம் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" - ஜெய்ராம் ரமேஷ்

``ஜி-20 லோகோவில் தாமரை; பாஜக வெட்கமின்றி விளம்பரம் செய்கிறது!" - காங்கிரஸ் சாடல்

``மோடியும், பா.ஜ.க-வும் வெட்கமின்றி விளம்பரம் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" - ஜெய்ராம் ரமேஷ்

Published:Updated:
ஜி-20 லோகோ

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் என 20 உறுப்பினர்களைக் கொண்ட ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அடுத்த மாதம் இந்தியா ஏற்கவிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, ஜி20-ன் கருப்பொருள் (Theme), சின்னத்தை (logo), பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

ஜி20 இந்தியா
ஜி20 இந்தியா

அதில், `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற வாசகமும், சின்னத்தில் `தாமரை' படமும் இடப்பெற்றிருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க தன்னுடைய சின்னமான தாமரையை, ஜி20 சின்னமாக வைத்திருக்கிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
Yann Forget / Wikimedia Commons

இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், ``70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கொடியை இந்தியாவின் கொடியாக மாற்றும் திட்டத்தை நேரு நிராகரித்தார். இப்போது, ​​ஜி20 தலைமை பொறுப்புக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சின்னம், அதிகாரப்பூர்வ சின்னமாக மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், மோடியும், பா.ஜ.க-வும் வெட்கமின்றி விளம்பரம் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" எனச் சாடியிருக்கிறார்.

இந்தக் கருத்து வெளியான சில மணி நேரத்திலேயே, பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, ``தாமரை நம் தேசிய மலர். அதனை நீங்கள் எதிர்க்கிறீர்களா" என்று காங்கிரஸ் மீது பதில்விமர்சனத்தை முன்வைத்தார்.

ஜி20 - மோடி
ஜி20 - மோடி

முன்னதாக ஜி20-ன் சின்னம் குறித்து மோடி, ``ஜி20-ன் சின்னம் வெறும் சின்னம் மட்டுமல்ல. நம் நரம்புகளில் ஓடும் உணர்ச்சி. அது இப்போது நம் எண்ணங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, இந்த முழு பூமியும் ஒரே குடும்பம் என்பது பற்றிய நம் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது" என நேற்று விலக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.