Published:Updated:

ராஜேந்திர பாலாஜி குறித்து விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்! - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

நாசர், ராஜேந்திர பாலாஜி
News
நாசர், ராஜேந்திர பாலாஜி

தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என்றெல்லாம் ராஜேந்திர பாலாஜி பேசி வந்தார். ஆனால் தற்போது அவர் தான் வெளியில் நடமாட முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்

தேனியில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக உழவர் சந்தை அருகே உள்ள ஆவின் விற்பனை நிலையம், பெரியகுளம் சாலை, மதுரை சாலைகளில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விற்பனை நிலையத்துக்கு பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு ஆவின் பொருள்களை விற்பனை செய்தார். பின்னர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்துக்கு நேரடியாக சென்று பாலின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வு
ஆய்வு

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், ``தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி ரூபாய் சிக்கியிருக்கிறது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் பெயர்கள் இருக்கின்றன. அதில் எடப்பாடி கே.பழனிசாமி பெயரும் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாசர்
நாசர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் பல மோசடி வழக்குகள் இருக்கின்றன. குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸார் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் அவர் முன்ஜாமீன்கோரி நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விசாரணையில் 3 கோடி ரூபாய் ராஜேந்திர பாலாஜி வாங்கியது தெரியவந்திருக்கிறது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் நடந்திருக்கிறது. அவர் செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. காத்திருங்கள் ராஜேந்திர பாலாஜி குறித்து விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என்றெல்லாம் ராஜேந்திர பாலாஜி பேசி வந்தார். ஆனால் தற்போது அவர் தான் வெளியில் நடமாட முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்'' என்றார்.