Published:Updated:

``உலக நாடுகளின் பிரச்னைகளில் இந்தியா தலையிடக் கூடாதா... இந்தப் பார்வை மாற வேண்டும்'' - ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

``நரேந்திர மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பது மிகப்பெரிய பலம்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், ``நரேந்திர மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பது மிகப்பெரிய பலம். பிற நாடுகளின் பிரச்னைகளில் இந்தியா தலையிடக் கூடாது என்பது ஒரு வகையான கொள்கை. இந்த நிலை மாற வேண்டும். 1950, 1960-ம் ஆண்டுகளில் பிற நாடுகளின் பிரச்னைகளில் தலையிடுவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை. ஆனால் சில நாள்களுக்கு முன்பு, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்திருக்கிறது. 20-வது இடத்தில் உள்ள ஒருவரின் சிந்தனையும், 5-வது இடத்தில் உள்ள ஒருவரின் சிந்தனையும் ஒன்றாக இருக்க முடியாது. எனவே, நமது திறனுக்கேற்ப நாம் மாற வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வெளிநாட்டுக் கொள்கைகளில் வாக்குவங்கி அரசியல் ஆதிக்கம் செலுத்தும் காலம் போய்விட்டது. இந்தியா இஸ்ரேலுடனான தனது உறவை மேம்படுத்தியிருக்கலாம். ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செய்யவில்லை. இந்திய வரலாற்றில் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் பிரதமர் மோடிதான்.

சீனாவின் சக்தி, பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றைப் பார்க்கும்போது அது இந்தியாவின் மிகப்பெரிய அண்டை நாடாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தைவிட சீனாவின் பொருளாதாரம் நான்கு மடங்கு பெரியது'' என்றார்.