Published:Updated:

ஜிஎஸ்டி நிலுவைத்தொகை: ``இப்போது நான் அவர் காலில் விழ வேண்டுமா..?" - பிரதமர் மோடியைச் சாடிய மம்தா

மோடி - மம்தா

``மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்." - மம்தா பானர்ஜி

ஜிஎஸ்டி நிலுவைத்தொகை: ``இப்போது நான் அவர் காலில் விழ வேண்டுமா..?" - பிரதமர் மோடியைச் சாடிய மம்தா

``மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்." - மம்தா பானர்ஜி

Published:Updated:
மோடி - மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி, மாநில அரசுக்கு வழங்கப்படவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை தொடர்பாக, `இப்போது நான் அவர் காலில் விழ வேண்டுமா?' என்று பிரதமர் மோடியைச் சாடியிருக்கிறார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா, ``100 நாள் வேலைத்திட்டம், வீட்டுத் திட்டங்கள் மற்றும் மாநிலத்துக்கான கிராம சதக் யோஜனா திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

மம்தா, மோடி
மம்தா, மோடி

பிரதமரை நேரில் போய் சந்தித்தேன். இனியும் என்ன இருக்கிறது. இப்போது நான் அவர் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா... நாங்கள் இப்போது வரி கட்டுவதை நிறுத்தினால் என்ன, மத்திய அரசு யாருக்கும் எந்த உதவியும் செய்வதில்லை. மொத்தப் பணத்தையும் ஜி.எஸ்.டி வடிவில் எடுத்துவருகிறது. எல்லோருக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில்தான் அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டோம். இப்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
vikatan

எல்லாவற்றுக்கும் வரி செலுத்துகிறோம். ஆனால் மத்திய அரசு பணத்தை எடுத்துக்கொண்டு, நமது அரசியலமைப்பு உரிமையை மறுக்கிறது. மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும், இல்லையெனில், ஆட்சியிலிருந்து விலக வேண்டும். மேலும், உங்களால் எங்களுக்குப் பணம் செலுத்த முடியாவிட்டால் ஜி.எஸ்.டி-யை நிறுத்துங்கள். மக்கள் இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதோடு, எங்களின் உரிமைகளை நீங்கள் பறிக்க முடியாது" என்று கூறினார்.