Published:Updated:

"பழிதீர்த்தார்... ஆட்சியைக் கவிழ்த்தார்..." - சித்தராமையா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் மாளவிகா

மாளவிகா
News
மாளவிகா ( பி.ஜே.பி )

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிராகக் காங்கிரஸைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ-க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. இதுகுறித்து அக்கட்சியின் கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகாவுடனான நேர்காணல்.

கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கூட்டணிக் குழப்பம், குதிரைப் பேரம் என குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

எடியூரப்பா - குமாரசாமி
எடியூரப்பா - குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிராகக் காங்கிரஸைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குக் காரணமான அந்த 14 பேரையும் கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தார். 14 பேரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற காங்கிரஸ் தலைமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் மாளவிகாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் நிலை என்னவாகும்?

எடியூரப்பா
எடியூரப்பா

17 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தார்கள். அதை ஏற்றுக்கொள்வதில், சபாநாயருக்குச் சில சிக்கல்கள் இருந்தன. அதற்கு முன்னதாகவே, நீதிமன்ற உத்தரவுப்படி, குமாரசாமி ஆட்சி கர்நாடகச் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதில், குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பெங்களூரு வந்து, அவர்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். தற்போது, ராஜினாமா செய்தவர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார்கள். பார்ப்போம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சித்தராமையாவுக்கும் குமாரசாமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் ஆட்சி கவிழ்ந்தது என்று பி.ஜே.பி சொல்கிறது... எதன் அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள்?

குமாரசாமி
குமாரசாமி

இதற்குமுன் ஒருமுறை காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணியில் ஆட்சி நடந்தது. திடீரென குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதுமுதலே, குமாரசாமி மீது சித்தராமையா கோபத்துடன் இருந்து வந்தார். குமாரசாமியைப் பழிதீர்க்கும் விதமாகத்தான், அவர்கூடவே இருந்த 13 எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்து, குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்குமுன், மருத்துவச் சுற்றுலா சென்ற சித்தராமையாவுடன், இந்த 13 எம்.எல்.ஏ-க்களும் சென்றார்கள். இவர்கள் அனைவரும் சித்தராமையாவுக்கு முக்கியமானவர்களாகக் கருதப்பட்டவர்கள். இவர்கள் மட்டும் குறிப்பாக ராஜினாமா செய்திருப்பதிலேயே, இது சித்தராமையாவின் சூழ்ச்சி என்று தெரிகிறது.

கர்நாடகாவில் ஆட்சி கவிழ, பி.ஜே.பி-யின் குதிரைப் பேரம் காரணமில்லை என்கிறீர்களா?

இது வேடிக்கையா இருக்கிறது. ராமலிங்க ரெட்டி, ரோஷன் பெய்க் போன்றவர்கள் பல ஆண்டுகளாகக் காங்கிரஸில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே பணம்படைத்தவர்கள்தாம். 13 பேரில் ஒருவருக்கு 1,000 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. இவர்களை ஏன் பி.ஜே.பி பணம் கொடுத்து அழைக்க வேண்டும்?

சித்தராமையா
சித்தராமையா

ஆட்சியில் பங்கெடுத்து இருப்பவர்கள் ஏன் ராஜினாமா செய்யப்போகிறார்கள்? பி.ஜே.பி பணம் கொடுத்தது என்கிறார்கள். அப்போது ஆட்சியிலிருந்தது யார்? போலீஸ் அவர்களிடம்தானே இருந்தது. உண்மையைக் கண்டுபிடித்து, வழக்கு தொடர்ந்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு, பி.ஜே.பி மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.

ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பி.ஜே.பி இணைத்துக்கொள்ளுமா?

அது, அவர்கள் எடுக்கும் முடிவு. ராஜினாமா செய்தவர்கள், எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்று வெளிப்படையாகக் கூற வேண்டும்.

எடியூரப்பா
எடியூரப்பா

மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருப்பதால், இதுகுறித்து எதுவும் பேச முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.