Published:Updated:

முதல்வராகும் சித்தராமையா, துணை முதல்வராகும் சிவக்குமார்; இருப்பினும் தொடருமா இருவரின் `பனிப்போர்?'

சிவக்குமார், கார்கே, சித்தராமையா

``என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும், இது தற்காலிகமானதுதான். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்ட் வார்’ வழக்கம்போல் தொடரும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Published:Updated:

முதல்வராகும் சித்தராமையா, துணை முதல்வராகும் சிவக்குமார்; இருப்பினும் தொடருமா இருவரின் `பனிப்போர்?'

``என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும், இது தற்காலிகமானதுதான். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்ட் வார்’ வழக்கம்போல் தொடரும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சிவக்குமார், கார்கே, சித்தராமையா

தேசிய அளவில் காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில், தோல்வியைத் தழுவியதால், ‘காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டது. இனி தேசிய அளவில் இரண்டாவது அணியாக காங்கிரஸ் தொடருவது சிரமம்’ என நாடு முழுவதிலும் பேசப்பட்டுவந்தது. இப்படியான நிலையில், கடந்த 10-ம் தேதி நடந்து முடிந்த கர்நாடக மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்று, ‘காங்கிரஸ் உயிர்ப்புடன்தான் இருக்கிறது’ என்பதை அந்தக் கட்சியினர் நிரூபித்திருக்கின்றனர். பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

கர்நாடகா காங்கிரஸ்
கர்நாடகா காங்கிரஸ்

ஆனால், கட்சியினர் வெற்றியைக்கூட முழுமையாகக் கொண்டாட முடியாத வகையில், முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்குமிடையே முதல்வர் பதவிக்கான ‘ரேஸ்’ நடந்தது.

பேச்சுவார்த்தை – போட்டி, பேட்டி!

ஒருபுறம் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து, தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துவந்தார்.

சிவக்குமார் Vs சித்தராமையா
சிவக்குமார் Vs சித்தராமையா

மறுபுறம் சித்தராமையா, ‘‘நான் இந்தத் தேர்தலுடன் எனது அரசியல் வாழ்வை முடித்துக்கொள்கிறேன். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ எனக் கூறினார்.

குழப்பக் கடலில் காங்கிரஸ்!

இருவரின் கோரிக்கைகளைக் கேட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேலிட உறுப்பினர்கள், செய்வதறியாமல் குழப்பத்தில் இருந்தனர். ஏற்கெனவே பல ஆண்டுகளாக ‘கோல்ட் வார்’ நிகழ்த்திவரும் சித்தராமையா, சிவக்குமார் இருவரையும் சமாதானப்படுத்த, ‘‘2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், 2.5 ஆண்டுகள் சிவக்குமாரும் முதல்வர் பதவி வகிக்கலாம். அல்லது முதல் இரண்டு ஆண்டுகள் சித்தராமையா, மீதமுள்ள 3 ஆண்டுகள் சிவக்குமார் முதல்வராக இருக்கலாம்’’ என்றனர்.

சித்தராமையா - டி.கே.சிவகுமார்
சித்தராமையா - டி.கே.சிவகுமார்

இந்த முடிவுக்கு இருவரும் ஒத்துவராத நிலையில், நேற்று, டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்திலும், மல்லிகார்ஜுன கார்கே வீட்டிலும், பல மணி நேரப் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக, சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் ஆட்சிக்கட்டிலை நிர்வகிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

சமாதானப்படுத்திய மேலிடம்!

இன்று காலை காங்கிரஸ் மேலிடம், ``இருவருமே முதல்வர் பதவிக்குத் தகுதியான நபர்கள்தான். பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர். மாநிலத்தில் சிவக்குமார் மட்டுமே துணை முதல்வர். மேலும், அடுத்த லோக் சபா தேர்தல் முடியும் வரையில், சிவக்குமார் மாநிலத் தலைவராகவும் தொடருவார்.

டி.கே.சிவக்குமார், சித்தராமையா
டி.கே.சிவக்குமார், சித்தராமையா

இருவரும் இணைந்து கர்நாடகத்தில் சமூகநீதியை நிலைநாட்டி, ஊழலற்ற ஆட்சி மூலம் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார்கள். வரும், 20-ம் (சனிக்கிழமை) தேதி, மதியம் 12:30 மணிக்கு பதிவியேற்பு விழா நடத்தப்படும்’’ என அறிவித்தது.

இதனால், மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர், பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகின்றனர்.

‘கோல்ட் வார்’ தொடரும்..!

‘என்னதான் காங்கிரஸ் மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தி பதவி கொடுத்திருந்தாலும். இது தற்காலிகமானதுதான். சித்தராமையா Vs சிவக்குமார் ‘கோல்ட் வார்’ வழக்கம்போல் தொடரும். வரும் நாள்களில் அதன் தாக்கங்களை நிச்சயமாகக் காண முடியும்’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கர்நாடகா அரசியலில், பா.ஜ.க Vs காங்கிரஸ் என்ற நிலை மாறி, சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார் ‘கோல்ட் வார்’ என்ற புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இருவரின் ‘கோல்ட் வார்’, அரசியல் களத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்..!