Published:Updated:

கர்நாடகா: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.எஸ் - பதவியேற்பு விழாவில் குவிந்த தலைவர்கள்

கர்நாடகா காங்கிரஸ் பதவியேற்பு விழா

தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இருவரும் சந்தித்த பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிப்பு வெளியானது.

Published:Updated:

கர்நாடகா: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.எஸ் - பதவியேற்பு விழாவில் குவிந்த தலைவர்கள்

தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இருவரும் சந்தித்த பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிப்பு வெளியானது.

கர்நாடகா காங்கிரஸ் பதவியேற்பு விழா

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களைப் பெற்று, அமோக வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கிடையில் யார் முதல்வர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்கள் அவரவர் தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை இருவரும் சந்தித்த பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதவ்லராகவும் அறிவிப்பு வெளியானது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன்...
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன்...

அதனடிப்படையில், கர்நாடக மாநில முதல்வராக இன்று இரண்டாவது முறையாக சித்தராமையாவும், துணை முதல்வராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றிருக்கின்றனர். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பெங்களூரிலுள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12:30 மணிக்கு முதல்வருக்கும், அவரது அமைச்சரவைக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றிருக்கின்றனர். மேலும், இதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்பு விழாவுக்கு ஒத்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா - டி.கே.சிவக்குமார்
காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சரத் பவார், தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருக்கின்றனர்.

பதவிப் பிரமாணம் செய்துகொண்டதற்குப் பின்னர் நடைபெறவிருக்கும் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 மாதாந்தர உதவித்தொகை, பிபிஎல் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், இரண்டு ஆண்டுகளுக்கு பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000, டிப்ளோமா முடித்தவர்களுக்கு ரூ1,500 (இரு பிரிவினரும் 18-25 வயதுக்குட்பட்டவர்கள்), பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகிய கோரிக்கைகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.