Published:Updated:

``பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் சிலர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்!" - சித்தராமையா

சித்தராமையா ( Twitter/@siddaramaiah )

பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக, கர்நாடகா எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

``பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் சிலர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்!" - சித்தராமையா

பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக, கர்நாடகா எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

Published:Updated:
சித்தராமையா ( Twitter/@siddaramaiah )

கர்நாடக மாநிலம், பதாமியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகப் பேசியுள்ளார். மேலும் அவர், ``பாஜக எப்போதும் ஒழுக்கத்தை கடைபிடிக்கிற கட்சி என்று அக்கட்சியினர் கூறுவார்கள், ஆனால், உண்மையில் அங்கு அப்படியொன்றும் இல்லை. பசவராஜ் பொம்மை ஆட்சியில் அமைச்சர் பதவிக்கான போட்டிகள்தான் பாஜக-வில் நடந்துகொண்டிருக்கின்றன. தவிர, மாநில வளர்ச்சிக்கான பணிகள் ஏதும் நடைபெறுவதில்லை, அது குறித்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.

கர்நாடகா முதலமைச்சர்  
 பசவராஜ் பொம்மை
கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

மேலும், ``தற்போதுகூட பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் என்னுடன் தொடர்பில்தான் இருக்கின்றனர், அவர்களின் பெயர்களைக் கூற விரும்பவில்லை, அதேபோல் அவர்கள் எப்போது காங்கிரஸில் சேருவார்கள் என்பதையும் இப்போது கூற முடியாது” என்று சித்தராமையா பேட்டியில் கூறினார். இதையடுத்து கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, ``அடுத்த ஆண்டு தேர்தலில் எந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று தெரியவில்லை. கட்சி மேலிடம் எங்கு போட்டியிடச் சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்” என்று கூறி முடித்தார்.