Published:Updated:

அமித் ஷா கூட்டத்தில் ஜம்முவில் கைதான தீவிரவாதி... `மெளனம் காப்பது ஏன்’ என காங்கிரஸ் சரமாரி கேள்வி

நரேந்திர மோடி - அமித் ஷா

போலிச் செய்திகள் மூலம் பிரசாரம் செய்யப்படுவதாக ஆட்சியாளர்கள் கருதியிருந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கலாம்.

அமித் ஷா கூட்டத்தில் ஜம்முவில் கைதான தீவிரவாதி... `மெளனம் காப்பது ஏன்’ என காங்கிரஸ் சரமாரி கேள்வி

போலிச் செய்திகள் மூலம் பிரசாரம் செய்யப்படுவதாக ஆட்சியாளர்கள் கருதியிருந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கலாம்.

Published:Updated:
நரேந்திர மோடி - அமித் ஷா

ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரம் லஷ்கர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர், ஜம்மு காஷ்மீரில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தீவிரவாதி தலிப் ஹுசைன் ஷா, பா.ஜ.க-வின் ஜம்மு மாகாணத்தின் சிறுபான்மை மோர்ச்சாவின் ஐடி (IT) மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின் அவர் ராஜினாமா செய்துவிட்டதாகவும், அவர் கட்சிக்குள் நுழைந்ததற்கு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையே காரணம் என்றும் பா.ஜ.க கூறியுள்ளது.மேலும், தலைமையைக் குறிவைத்து அவர் அமைப்பில் ஊடுருவியிருக்கலாம் என்று பா.ஜ.க விளக்கமளித்திருந்தது.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதி தலிப் ஹுசைன் ஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது.

காங்கிரஸ் புகைப்படத்தை வெளியிட்டு 24 மணி நேரத்தைக் கடந்தும் இதுவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வோ அல்லது பா.ஜ.க தலைமையோ அந்த புகைப்படத்துக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக தி டெலிகிராப் செய்தி நிறுவனம், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அந்தப் புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்துக் கேட்டதாகவும், அதற்கு அமைச்சக செய்தித் தொடர்பாளர், இந்த கேள்விக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரி பதிலளித்தவுடன் ஊடகத்தை தொடர்புகொள்வதாகவும் கூறியதாகத் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு முன்பும் பலமுறை போலி செய்தி பரப்பியவர்கள் எனப் பலர்மீது பா.ஜ.க வழக்குப் பதிவு செய்திருந்தது போல, இந்த புகைப்படம் குறித்தும், போலிச் செய்திகள் மூலம் பிரசாரம் செய்யப்படுவதாக பா.ஜ.க தலைமை கருதியிருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கலாம். ஆனால், இந்த படத்தைப்பற்றி திங்கள்கிழமை இரவு வரை, தீவிரவாதி ஹுசைன் ஷா மற்றும் அமித் ஷா இருக்கும் புகைப்படம் போலியானது என எந்த தலைவரும் அறிவிக்கவில்லை.

ஜம்முவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்
ஜம்முவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்
ட்விட்டர்

ஜம்மு பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும், ஜம்முவைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அபினவ் சர்மா ஜம்முவில் நடந்த ஊடக சந்திப்பின் போது, அமித் ஷாவின் படம் குறித்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார். அப்போது கூட, அமித் ஷாவுடன் தீவிரவாதி ஹுசைன் இருந்ததை அவர் மறுக்கவில்லை. ஆனால், ஹுசைன் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறி அணுகியதாக விளக்கமளித்துள்ளார்.

மற்றொரு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ். பதானியா-வும் உள்துறை அமைச்சருடன் தீவிரவாதி ஹுசைன் இருந்ததை மறுக்கவில்லை, மேலும், இந்த படம் 2017 -ல் எடுக்கப்பட்டதாக ஒரு அதிகாரப்பூர்வ நபரிடமிருந்து தான் அறிந்ததாகத் தெரிவித்துள்ளார். திவிரவாதி ஹுசைன் வசித்த ரஜோரியின் தார்ஜ் கிராமத்தைச் சேர்ந்த சர்பஞ்ச் ஆலம் டின்,`` தீவிரவாதி ஹுசைன் அவர் பருவ வயதிலிருந்தே பா.ஜ.க-வில் தான் இருந்தார்" எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.