Published:Updated:

``அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமையே சரியானது" - நெல்லையில் நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் பேட்டி

``எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட அ.தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்துக்குத் திறமையும் தகுதியும் மிகுந்த ஒற்றைத் தலைமையே சரியானது" என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமையே சரியானது" - நெல்லையில் நயினார் நாகேந்திரன்

``எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட அ.தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்துக்குத் திறமையும் தகுதியும் மிகுந்த ஒற்றைத் தலைமையே சரியானது" என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன் பேட்டி

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவற்றின் சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார்.

யோகா தின நிகழ்ச்சி
யோகா தின நிகழ்ச்சி

இது தவிர, கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பகுதியிலுள்ள கேன்பிரிட்ஜ் பள்ளியில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளி மாணவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாலாஜி நாகேந்திரன், மாவட்ட பா.ஜ.க தலைவர் தயா சங்கர், மாநில மகளிரணிச் செயலாளர் தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் யோகாசனம் செய்தார்கள்.யோகாசனத்தில் மூன்று டாக்டர் பட்டம் மற்றும் இளம் வயதிலேயே யோகா ஆசிரியர் உள்ளிட்ட சாதனைகள் புரிந்த சிறுமி பிரிஷாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., “நமது நாட்டின் பாரம்பர்யம், கலாசாரம் காரணமாக உலக நாடுகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கின்றன. காங்கிரஸ் கட்சி தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. அக்னிபத் திட்டம் மிகவும் அற்புதமான திட்டம். தமிழ்நாட்டில் இதை எதிர்க்க திரைமறைவிலிருந்து தி.மு.க தூண்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க என்பது மிகப்பெரிய கட்சி. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம். ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியின் தலைமைக்குத் தகுதியுள்ளவர்கள், திறமையுள்ளவர்கள், கட்சித் தொண்டர்களுக்குப் பிடித்த ஒருவர் வர வேண்டும்.

யோகா நிகழ்ச்சி
யோகா நிகழ்ச்சி

அ.தி.மு.க கட்சி விதி 20-ன்படி கூட்டத்தில் எல்லா சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ள வேண்டும். அதாவது டவுன் பஞ்சாயத்து செயலாளர் முதல் அனைத்துச் சிறப்பு அழைப்பாளர்களும் எல்லாக் காலங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் சிறப்பு அழைப்பாளர்கள் நிச்சயமாக அழைக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், அந்தக் கட்சியைக் கட்டிக்காக்கத் தகுதியான, திறமையான தலைமை வேண்டியது அவசியம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism