Published:Updated:

``பாஜக பகவத்கீதை மூலமாக வன்முறை தத்துவத்தை கொண்டுசெல்ல முயல்கிறது!" - சீத்தாரம் யெச்சூரி தாக்கு

சீத்தாரம் யெச்சூரி

`மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை புகுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்பின் மீதே தாக்குதல் நடத்துகிறது. நாட்டின் நீதிமன்றங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. நீதிமன்றங்களின் மூலம் நியாயம் கிடைப்பது தடுக்கப்படுகிறது.' - சீத்தாரம் யெச்சூரி

``பாஜக பகவத்கீதை மூலமாக வன்முறை தத்துவத்தை கொண்டுசெல்ல முயல்கிறது!" - சீத்தாரம் யெச்சூரி தாக்கு

`மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை புகுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்பின் மீதே தாக்குதல் நடத்துகிறது. நாட்டின் நீதிமன்றங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. நீதிமன்றங்களின் மூலம் நியாயம் கிடைப்பது தடுக்கப்படுகிறது.' - சீத்தாரம் யெச்சூரி

Published:Updated:
சீத்தாரம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ்நாடு மாநில மாநாடு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``நாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு, ஆர்.எஸ்.எஸ்-ஸின் எண்ணங்களை செயல்படுத்தி வருகிறது.

சீத்தாரம் யெச்சூரி
சீத்தாரம் யெச்சூரி

நாட்டின் பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயல்கின்றனர். கார்ப்பரேட்டுகளோ நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கின்றனர். பா.ஜ.க அரசு இந்திய மக்களின் உரிமைகளை பறிக்கிறது, கொடுமையான சட்டங்களை இயற்றி மக்களை துன்புறுத்துகிறது. அதனால், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை புகுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்பின் மீதே தாக்குதல் நடத்துகிறது. நாட்டின் நீதிமன்றங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. நீதிமன்றங்களின் மூலம் நியாயம் கிடைப்பது தடுக்கப்படுகிறது, நாட்டின் அடிப்படை ஜனநாயக அம்சமான சி.ஏ.ஏ, காஷ்மீர் வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மாநாடு தொடக்க விழா
மாநாடு தொடக்க விழா

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் அரசியல் பழிவாங்கலுக்கும், அச்சுறுத்தலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் அடிப்படை அமைப்புகள் தகர்க்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பெறப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

அதனால்தான் இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுத்துள்ளது. நாட்டின் அடிப்படையான 4-வது தூண்களை தகர்த்து எறிகிறது பா.ஜ.க. கூட்டாட்சி தத்துவம் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதேபோல, நாட்டின் பன்முக கலாசார, மொழிகளை காக்கும் அரசியல் சட்டத்தை, இந்திய அரசின் ஒருமைப்பாட்டை தாக்கும் வகையில் ஒற்றை நாடாக மாற்ற முயல்கிறது மத்திய அரசு. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

மார்க்சிஸ்ட் மாநாடு
மார்க்சிஸ்ட் மாநாடு

பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை அழித்து ஒற்றை கலாசாரத்தை புகுத்த முயல்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது. சிஏஏ சட்டத்தை இயற்றியபோது மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களை கொண்டுவந்தபோது அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு, போராட்டம் என்றவுடன் சட்டத்தை திரும்ப பெற்றது. அதேபோல. மத்திய அரசை கண்டித்து 4-வது முறையாக பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையிலும், பா.ஜ.க மீண்டும், மீண்டும் ஏன் வெற்றி பெறுகிறது என்பதை சிந்திக்க வேண்டும். மத்திய அரசு இந்துத்துவாவை முன்னிலைப்படுத்துகிறது, நாட்டின் விலைவாசி, வேலையின்மை குறித்து மக்களிடம் பேசுவதில்லை. ஆனால், மக்களை மத ரீதியாக பிரிக்கும் பேச்சுகளை அந்தக் கட்சியினர் பேசிவருகின்றனர்.

சீத்தாரம் யெச்சூரி
சீத்தாரம் யெச்சூரி

சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து மக்களை இணைக்க முயல்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை பகுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இந்துத்துவா என்ற கொள்கையை எடுத்துரைத்து மக்களின் பிரச்னைகளை மறைத்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகின்றனர்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 90-களில் காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நடந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றிய படம். 90-களில் ஏற்பட்ட கலவரத்தில் 89 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டதாக ராணுவத் தகவல் உள்ள நிலையில், 1,600 இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டுள்ளதை மறைத்து, அவர்களுக்கு எதிராக மோதலை உருவாக்குகிறது.

விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு ஒற்றுமை ஏற்பட வேண்டும், அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க அரசு மக்களை பிரித்தாள்கிறது. அதற்காகத்தான் இது போன்ற மதவாத முயற்சிகளை கையில் எடுக்கிறது. மதசார்பற்ற அடிப்படையை தகர்க்கும் நோக்கில் பகவத்கீதையை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்கின்றனர்.

பகவத்கீதை மூலமாக வன்முறை தத்துவத்தை கொண்டுசெல்ல பா.ஜ.க முயல்கிறது. ஏன் அவர்கள் பகவத்கீதையை முன்னுறுத்துகின்றனர் என்றால் சாதி ரீதியான அடுக்ககளை அந்த நூல் நியாயபடுத்திக் காட்டுகிறது.

மார்க்சிஸ்ட் மாநாடு
மார்க்சிஸ்ட் மாநாடு

மேல் சமூகத்தில் பிறந்தவர்களுக்கு கீழ் சமூகத்தில் பிறந்தவர்கள் சேவையாற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் பகவத்கீதை போதனைகள் உள்ளன. சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில் உள்ள பகவத் கீதை, பெண் என்றால் தந்தை கணவனுக்கு பணியாற்றி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகிறது.

பெண்ணடிமை, சாதிய தன்மையை நியாயப்படுத்தும் பகவத்கீதையை முன்னிறுத்தி பா.ஜ.க-வின் கட்டமைப்பை கொண்டு செல்ல முயல்கின்றனர். இந்துத்துவா அமைப்புகளின் இது போன்ற செயல்களை எதிர்க்க வேண்டி உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். அமெரிக்க ஏகாதியபத்தியம் சோசலிஷ நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கையில் எடுத்திருகிறது. கொரோனாவை பயன்படுத்தி சீனாவை தனிமைப்படுத்தி வருகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா பல்வேறு தில்லுமுல்லுகளை செய்கிறது" என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து மாலை செஞ்சட்டை பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.