Published:Updated:

சிவகங்கை: அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் மறுப்பு - தீக்குளிக்க முயன்ற ஆதரவாளர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீட்டு கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்
சீட்டு கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதி அமைச்சர் பாஸ்கரனுக்கு ஒதுக்காததால், அவரின் ஆதரவாளர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2016-ம் ஆண்டு சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜி.பாஸ்கரன். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் சிவகங்கை, மானாமதுரையில் மட்டும் அ.தி.மு.க வெற்றிபெற்றது. திருப்பத்தூர், காரைக்குடி தொகுதியை தி.மு.க மற்றும் காங்கிரஸ் தட்டிச் சென்றன. 2016-ல் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து அ.தி.மு.க அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த அவருக்கு சென்னை வரச்சொல்லி போன் வந்தது.

சீட் கிடைக்காத விரக்தியில் அமைச்சரின் ஆதரவாளர்கள்
சீட் கிடைக்காத விரக்தியில் அமைச்சரின் ஆதரவாளர்கள்

மீண்டும் சென்னை சென்ற அவர், அமைச்சராகத் தொகுதிக்கு திரும்பினார். திடீர் எனக் கூப்பிட்டு அமைச்சர் பதவி கொடுத்தது பாஸ்கரனுக்கு லக்கி பிரைஸ் அடித்ததுபோல் இருந்தது. மாவட்டத்தில் நான்கில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றதால் இருவரில் ஒருவர் என்ற முறையில் பாஸ்கரனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஒரு பேட்டியில், `இனி நடிகர்களின் கட்சியெல்லாம் எடுபடாது. விஜயகாந்த் கட்சியின் நிலைதான் ஏற்படும்’ என அப்போதைய அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான தே.மு தி.க குறித்து கருத்து தெரிவித்து, தன்னையும் சர்ச்சைக் கருத்துகள் தெரிவிக்கும் அமைச்சர்கள் பட்டியலில் சேர்ந்துக்கொண்டார் பாஸ்கரன். அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, `இப்படி ஓர் அமைச்சர் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது’ எனப் பேசினார். அவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் அப்போதுதான் தெரிந்தது.

இதேநிலைதான் தொகுதியிலும். வாஜ்பாயை தற்போதைய பிரதமர் எனக் கூறியது உள்ளிட்ட தொடர் சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்துவந்தார். சில வாரங்களுக்கு முன்னர் சிவகங்கைக்கு வந்த மு.க.ஸ்டாலின் தி.மு.க மேடையில், அமைச்சர் பாஸ்கரனைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பஃபூன்களின் வரிசையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் வர முயல்கிறார் என்றார். ஸ்டாலின் சாடியதுபோலத்தான் உண்மை நிலையும் என்கின்றனர் இந்தத் தொகுதி மக்கள். அமைச்சராக சொல்லிக்கொள்ளும்படியான எந்தத் திட்டமும் இவரால் கொண்டுவரப்படவில்லை. கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ-க்கள் அளவில் செய்யும் பணிகளான பஸ் ஸ்டாப், நாடக மேடை, சுகாதார வளாகக் கட்டடம் கட்டும் பணிகளையே இவரும் செய்திருக்கிறார். மாவட்டத்தில் மணல் அள்ளும் வாய்ப்புகளை உறவினருக்கு அள்ளிக் கொடுத்தார்.

சீட் கிடைக்காததால் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்
சீட் கிடைக்காததால் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்

`சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம்’ எனறு உளவுத்துறை தகவல் வழங்கியது. அதனால் தனக்கு பதில், மகனுக்காவது கொடுங்கள் என எடப்பாடியிடம் கோரினார் பாஸ்கரன். அ.தி.மு.க சிவகங்கை மாவட்டச் செயலாளரான செந்தில்நாதன், காரைக்குடி தொகுதியைக் கேட்டார், திருப்பத்தூர் தொகுதியை நமது அம்மா பத்திரிகை ஆசிரியர் மருதுஅழகுராஜ் குறிவைத்தார். மேலிட செல்வாக்குமிக்க இருவரும் அமைச்சர் பதவிக்கு குறிவைப்பார்கள் என்பதால், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தன் மகனுக்கு வாய்ப்பிருக்காது என நினைத்து மீண்டும் தானே போட்டியிடுவது என்ற முடிவில் அமைச்சர் அதற்கான வேலைகளைத் தீவிரமாகச் செய்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை; அவரின் மகனுக்கும் சீட்டு கிடைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகங்கை தொகுதியில் அமைச்சர் பாஸ்கரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் என்பதால், தற்போதைய மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. காரைக்குடி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், சிவகங்கைத் தொகுதி செந்தில்நாதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க வேட்பாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டிருப்பது ஒருபக்கம் வரவேற்பையும், அமைச்சர் குடும்பத்தை அதிரவும் வைத்திருக்கிறது. இந்தநிலையில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியை அமைச்சர் பாஸ்கரனுக்கு ஒதுக்காமல் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை நகர்ப் பகுதி முழுவதும் ஊர்வலமாகச் சென்று கோஷங்களை எழுப்பினர்.

சிவகங்கை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன்
சிவகங்கை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன்

பின்னர் சிவகங்கை எம்.ஜி.ஆர் சிலை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டதோடு அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் தீடீரென தங்கள் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர்‌. இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது‌.

செந்தில்நாதன் ஆதரவாளர்கள் இது பற்றிக் கூறுகையில், ``அமைச்சர் பாஸ்கரனுக்கும் செந்தில்நாதனுக்கும் ஆகாது. இருந்தாலும், கட்சிப் பார்வைக்காக இருவரும் நெருக்கமாக காட்டிக்கொண்டனர். காரைக்குடியில் சீட் கிடைத்து வெற்றிபெறுவார் என்று நினைத்தோம். ஆனால் அந்தத் தொகுதி பா.ஜ.க-வுக்கு கொடுக்கப்பட்டதால் மாவட்டத் தலைநகர் சிவகங்கை, செந்தில்நாதனுக்குக் கிடைத்திருக்கிறது. சிவகங்கை தொகுதியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வலுவான வேட்பாளர் இல்லை என்பதால் தொகுதியை எளிதாகக் கைப்பற்றுவார்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் அவர் மகன் கருணாகரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் அவர் மகன் கருணாகரன்

அமைச்சர் பாஸ்கரன் தற்போது சீட் கிடைக்கவில்லை என்பதால் கட்சித் தலைமைக்கே எதிராகத் திரும்பியிருக்கிறார். அவரின் உறவினர்களையும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு வந்து போராட்ட நாடகம் நடத்துகிறார். 500 ரூபாய் பணம், வண்டிக்கு பெட்ரோல், பிரியாணி, சரக்கு என்று எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவு செய்து போராட்டத்தைத் தூண்டிவிட்டிருக்கிறார். போராட்டத்தில் பலரும் மது போதையில் இருப்பதை நேரடியாகக் காண முடிந்தது. இது முழுக்க அமைச்சரின் ஏற்பாடுதான். இனி தலைகீழாக நின்றாலும் அவருக்கு சீட் கிடைக்காது” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு