Published:Updated:

விருதுநகர்: திருத்தங்கலில் வீடுகளுக்கு முறைகேடான குடிநீர் இணைப்பு - குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவு

மாநகராட்சி

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சியில் முறைகேடாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய அதிகாரிகள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டிருக்கிறது.

விருதுநகர்: திருத்தங்கலில் வீடுகளுக்கு முறைகேடான குடிநீர் இணைப்பு - குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சியில் முறைகேடாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய அதிகாரிகள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
மாநகராட்சி

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி சுப்ரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் இந்திராதேவி - மாரீஸ்வரன் தம்பதியர். இவர்கள், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் திருத்தங்கல் நகராட்சி முறைகேடுகள் குறித்து மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் மாலிக் ஃபெரோஸ்கான் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்தப் புகார் மனுவில், ``கடந்த 10 ஆண்டுகளாக திருத்தங்கல் நகராட்சியில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன், அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய டெபாசிட் தொகையை மட்டும் கட்டிவிட்டு ரசீது போட்டுத் தராமல் முறைகேடாக வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வழங்கியுள்ளனர். இதனால் நகராட்சிக்குப் பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட திருத்தங்கல் நகராட்சியில் கிணற்றுக் காவலராக இருந்த கண்ணன்தான் முதல் காரணம். இவர்மீது பலமுறை புகார் அளித்தும் உயரதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கண்ணன்மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்.

மாநகராட்சி
மாநகராட்சி

இதையடுத்து, முறைகேடுகள் தொடர்பாக ஆணையாளரிடம், கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக உதவி செயற்பொறியாளர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், கிணற்றுக் காவலர் கண்ணன் ஆகியோர் இணைந்து திருத்தங்கலில் வீடுகளுக்கு முறைகேடாக வழங்கிய குடிநீர் இணைப்புகளை திடீரென அடைத்துவருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்‌. இது தொடர்பாக நியாயம் கேட்கும் மக்களை காவல் நிலையப் பெயரைச் சொல்லி மிரட்டுவதுடன், குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்க வேண்டுமென்றால் நகராட்சியில் பணம் கட்டி பெற்றுக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

சிவகாசி
சிவகாசி

இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணன் என்பவரைப் பணியிட மாறுதல் மட்டும் செய்து ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருத்தங்கல் நகராட்சி, சிவகாசியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக அரசால் தரம் உயர்த்தப்பட்ட பிறகும்கூட, கடந்த மே மாதம் வரையில் முறைகேடான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே வந்துள்ளன. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே, பணம் பெற்றுக்கொண்டு வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கி அரசுக்குப் பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஊழியர்கள்மீதும், இதைத்தடுக்க தவறிய ஆணையாளர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் புகாரை விசாரித்த உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் மாலிக் ஃபெரோஸ்கான், "பிரச்னைக்குத் தீர்வு காணாததற்குக் காரணமாக இருந்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளின்படி துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிகள் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், தற்போது சிவகாசி மாநகராட்சி குழாய் பொருத்துநராக உள்ள கண்ணன் மற்றும் முறையற்ற குடிநீர் இணைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறையில் புகாரளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் இணைப்பு முறைகேடுகளுக்கு முக்கியக் காரணமாக உள்ள குழாய் பொருத்துநர்கள் மற்றும் ஏனைய கள அலுவலர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்துவருவதுதான் தவற்றுக்கு முக்கியக் காரணியாக தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் வெவ்வேறு நகராட்சிகளுக்கு பணிமாறுதல் செய்ய வேண்டும். குடிநீர்க் குழாய் பழுது, குடிநீர் இணைப்பு, துண்டிப்பு போன்ற மனுக்கள் வரப்பெற்றால் அவற்றைச் சிறப்பு இனங்களாகக் கருதி பிரச்னையைச் சரிசெய்ய உத்தரவிட வேண்டும்” என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக, விருதுநகர் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிவந்த தெட்சிணாமூர்த்தி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக இருந்த ஸ்டான்லி பாபு விருதுநகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.