ஊடக விவாதங்களில் அ.தி.மு.க-வின் முக்கியமான பிரசார பீரங்கியாக வலம்வருபவர், சிவசங்கரி. உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர். பேச்சாற்றல் மற்றும் திறமையான வாதங்கள் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தைப்பெற்றவர். அவருடனான சந்திப்பில்...

நீங்கள் யாரிடம் அரசியல் கற்றுக்கொண்டீர்கள்?

என் அரசியல் குரு அம்மாதான். பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே அம்மாவின் ஆளுமைமிக்க செயல்பாடுகளைப் பார்த்துப்பார்த்து வளர்ந்தவள் நான்.

அ.தி.மு.க என்கிற பிரமாண்டமான ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டிக்காத்ததுடன், அதை மேலும் வளர்த்தெடுத்தவர், அம்மா. ஆட்சி நிர்வாகத்திலும் ஆளுமைமிக்கவராகச் செயல்பட்ட நிகரற்ற தலைவர். அவரால் ஈர்க்கப்பட்டுதான் அரசியலுக்கே வந்தேன். அன்பு, பாசம், சேவை, ஆளுமை, துணிச்சல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். எனக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க-வில் உள்ள அத்தனை பேருக்கும் அம்மாதான் அரசியல் குரு.

உங்கள் கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார். கட்சியை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அதன் அசைக்க முடியாத தலைவராக ஜெயலலிதா இருந்தார். இவர்களில் யாருடைய கொள்கைகளை அதிகமாகப் பின்பற்றுகிறீர்கள்?

அண்ணாவின் அரசியலையும் அண்ணா வின் கொள்கையையும்தான் பின்பற்றுகிறோம். அது, சமூகநீதி என்கிற அடிப்படைக் கொள்கை. அந்தக் கொள்கையை மேலும் மேலும் வலுப்படுத்தியதில், அடுத்தடுத்து அ.தி.மு.க-வுக்குத் தலைமை வகித்த எல்லா தலைவர்களுக்கும் பங்கு உண்டு.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எப்படி இருக்கிறது?

முதல்வரின் அரசியல், ஓர் அன்பான அரசியல். மிகவும் எளிமையான மனிதர் அவர். எல்லோருக்கும் உரிய வாய்ப்புகளை வழங்குகிறார். ஜனாதிபதியைப் பார்த்தாலும் அதே புன்னகைதான், ஒரு தொண்டரைப் பார்த்தாலும் அதே புன்னகைதான். என்னைப் போன்ற இளைய தலைமுறையினர் அடுத்த கட்டத்துக்கு வளர்வதற்கு, அவருடைய இந்த அணுகுமுறைதான் முக்கியக் காரணம்.

பி.ஜே.பி-யின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கியது. இப்போது, அவர்களின் கையில் அதிகாரம் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுக் கால பி.ஜே.பி ஆட்சியில், ஊழல் என்பது இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட முந்தைய அரசுகள் செய்த தவறுகளைச் சரிசெய்து, நல்ல ஆட்சியை நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க-வின் ஆன்மிக அரசியல் பற்றி..?

என்னதான் பெரியாரின் பரிணாம வளர்ச்சியில் வந்த கட்சி அ.தி.மு.க என்றாலும், கடவுள் நம்பிக்கை போன்ற தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. கும்பாபிஷேகம், யாகம் எல்லாம் அம்மாவே நடத்தினார்கள். இதில், நாங்கள் வெளிப்படையாகவே இருக்கிறோம். தி.மு.க-வைப்போல, ‘கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்’ என்று வெளியே சொல்லிக்கொண்டு, ரகசியமாகக் கோயிலுக்குப் போகிற இரட்டை வேடம் எங்கள் கட்சியில் இல்லை.

ஈழ அரசியலில் உங்கள் ஈடுபாட்டுக்கான காரணம் என்ன?

தமிழ் ஈழத்துக்காகப் போராடியவர்கள்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. புரட்சித்தலைவரே அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். ஆனால், கடைசிக் கட்டத்தில் ஏற்பட்ட தோல்வி, இன்றுவரை மனதில் வடுவாக இருக்கிறது. ஈழத் தமிழ்மக்கள் இன்னமும் பெரும் துயரத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. பிரபாகரன் என்கிற ஒரு வீரனின் தியாகம் வீணாகிவிட்டதே என்கிற வருத்தம் இருக்கிறது.