Published:Updated:

`மழைவிட்டதும் சி.பி.ஐ விசாரணை?!’ - டெல்லியிலிருந்து வந்த உத்தரவு

தமிழக முதல்வர் ஸ்டாடலின், ஸ்மார்ட் சிட்டி ஊழல் பற்றி விசாரிப்போம் என்று அறிவித்துவிட்டார். இவர் விசாரித்து ஊழலை வெளிப்படுத்தினால், பாஜக அரசின் இமேஜ் பாதிக்கப்படும் என நினைக்கிறார்களாம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுல், மத்திய அரசின் திட்டங்களை எந்த அளவுக்கு திமுக அரசு நிறைவேற்றுகிறது என்று மத்திய உளவுத்துறையினர் கண்காணித்துவருகின்றனர். தமிழகத்துக்குப் புதிய கவர்னராக அண்மையில் பதவி ஏற்ற ரவி-யும் கண்காணித்துவருகிறார். இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டங்களில் நடந்த ஊழல் பற்றித் தகவல் வந்தபோதெல்லாம் ஏனோ கண்டுகொள்ளாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இருந்ததாம். அரசியல் கூட்டணி வைத்திருப்பதால் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்
ஸ்மார்ட் சிட்டி பணிகள்

ஆனால், தற்போது மழை, வெள்ள பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாகக் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்தத் திட்டத்துக்காகப் பெருமளவு மத்திய அரசின் நிதி தரப்படுகிறது. இதில் ஊழல ஏதும் நடந்தால், மத்திய அரசுத் தரப்பில் சி.பி.ஐ-யை அனுப்பி விசாரிக்க முடியும். ஆனால், இதுநாள் வரை செய்யாமல் இருந்தது மத்திய அரசு. இப்போது, தமிழக முதல்வர் ஸ்டாடலின், ஸ்மார்ட் சிட்டி ஊழல் பற்றி விசாரிப்போம் என்று அறிவித்துவிட்டார். இவர் விசாரித்து ஊழலை வெளிப்படுத்தினால், பாஜக அரசின் இமேஜ் பாதிக்கப்படும் என நினைக்கிறார்களாம்.

சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ - முதல்வர் ஸ்டாலின்

தெரிந்தே அதிமுக அரசை ஊழல் செய்ய பாஜக அரசு அனுமதித்தது என்று திமுக சார்பில் பிரசாரம் செய்யப்படும். இதைத் தவிர்க்க, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நவம்பர் 10-ம் தேதியன்று சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அதையடுத்து, மத்திய உள்துறை சார்பில் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருக்கிறதாம்.

சி.பி.ஐ
சி.பி.ஐ

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் மழை ஓய்ந்ததும், சி.பி.ஐ அதிகாரிகள் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்தவர்களை தமிழக அரசின் நடவடிக்கைக்கு முன்பாக, மத்திய அரசு சி.பி.ஐ-யை அனுப்பி, பிடித்து உள்ளே தள்ளும் என்கிறார்கள் பாஜக பிரமுகர்கள் சிலர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு