Published:Updated:

`பதாகைகள், கோஷங்களுடன் மோதிக்கொண்ட எம்.பி-க்கள்!' - அவையின் பெயரைக் காக்கப் போராடிய ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

ரமேஷ் பிதுரி உள்ளிட்ட பா.ஜ.க எம்.பி-க்கள் அவர்களிடமிருந்து பதாகைகளைப் பறிக்க முயன்றதோடு இருக்கைக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

`பதாகைகள், கோஷங்களுடன் மோதிக்கொண்ட எம்.பி-க்கள்!' - அவையின் பெயரைக் காக்கப் போராடிய ஸ்மிருதி இரானி

ரமேஷ் பிதுரி உள்ளிட்ட பா.ஜ.க எம்.பி-க்கள் அவர்களிடமிருந்து பதாகைகளைப் பறிக்க முயன்றதோடு இருக்கைக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
ஸ்மிருதி இரானி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ஜெய்ஸ்வால் பேசிக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கௌரவ் கோகாய் மற்றும் குர்ஜித் சிங் ஆகியோர் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டுள்ளனர். பின்னர், ரமேஷ் பிதுரி உள்ளிட்ட பா.ஜ.க எம்.பி-க்கள் அவர்களிடமிருந்து பதாகைகளைப் பறிக்க முயன்றதோடு இருக்கைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருதரப்பு எம்.பி-க்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை
மக்களவை

பதற்றமான சூழல் நிலவிய நேற்று, அவையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் யாரும் இல்லை. அதேபோல எதிர்க்கட்சியில் காங்கிரஸின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் அவையில் இல்லை. இதைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களும் மத்திய அமைச்சர்களுமான ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் எம்.பி-க்களைச் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் தனது இருக்கையில் இருந்து எழுந்து கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

தொடர்ந்து அவையில் குழப்பம் நிலவியதால் ஓம் பிர்லா அவையை 4 மணிக்கு ஒத்திவைத்தார். மீண்டும் கூடிய அவையில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ரம்யா ஹரிதாஸ் பதாகையுடன் கோஷமிட்டுள்ளார். இதனால், அவருக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி-க்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க எம்.பி ஜஸ்கௌர் மீனா தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவையில் நிலைமை மோசமாகிக்கொண்டே சென்றதால் இரானி மீண்டும் தலையிட்டு அவர்களை இருக்கைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ``மக்களவைக்கென சில பாரம்பர்ய நெறிமுறைகள் உள்ளன. அதற்குக் களங்கம் விளைவிக்காத வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டும். இங்கு நடந்தவற்றை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. அவையைத் தொடர்ந்து நடத்த எனக்கு விருப்பமில்லை" என்று கூறி நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டது குறித்து பி.எஸ்.பி கட்சி உறுப்பினர் ஒருவர் பேசும்போது, ``ஸ்மிருதி இரானி, அவையை அவமானத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். உறுப்பினர்களின் கோபம் அதிகமாகிக்கொண்டே இருக்கும்போது என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால், அவர் அந்த நிலைமையை சரியாகக் கையாண்டார்" என்று கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

பின்னர், வெளியே வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம், ``மக்களவையில் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி-க்கள், பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் எம்.பி-க்களிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப் போகிறேன். கடந்த மூன்று அவைக் கூட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் குண்டர்களைப் போலச் செயல்படுகின்றனர். அவையை நடக்க விடாமல் சீர்குலைக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.