Published:Updated:

மதுபான உரிமம் சர்ச்சை: "ஸ்மிருதி இரானியும், அவர் மகளும் உரிமையாளர்கள் அல்ல!"- டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

``உண்மைகளைச் சரிபார்க்காமல் அவதூறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினரான ஸ்மிருதி இரானியின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்." - டெல்லி உயர் நீதிமன்றம்

மதுபான உரிமம் சர்ச்சை: "ஸ்மிருதி இரானியும், அவர் மகளும் உரிமையாளர்கள் அல்ல!"- டெல்லி உயர் நீதிமன்றம்

``உண்மைகளைச் சரிபார்க்காமல் அவதூறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினரான ஸ்மிருதி இரானியின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்." - டெல்லி உயர் நீதிமன்றம்

Published:Updated:
டெல்லி உயர் நீதிமன்றம்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள், கோவாவில் மதுபான உணவகம் நடத்தி வருவதாகவும், அதன் உரிமத்தைப் புதுப்பிக்க இறந்தவரின் ஆவணங்கள் பயன்படுத்தியதாகவும், வழக்கறிஞர் ஒருவர் அண்மையில் புகாரளித்திருந்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸும் அதே குற்றச்சாட்டினை கூறிவந்தது. ஆனால் இதனை மறுத்த ஸ்மிருதி இரானி, தன் மகள் கல்லூரியில் படிக்கிறாள் என்றும், அவள் மதுபான உணவகம் ஏதும் நடத்தவில்லையென்றும் கூறியிருந்தார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

அதைத் தொடர்ந்து, மதுபான உணவகத்துக்கான உரிமம் வழங்கப்பட்ட அந்தோணி டிகாமா என்பவரின் குடும்பத்தினர், இது முழுக்க முழுக்க தங்களின் வணிகம், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஸ்மிருதி இரானியும், அவரின் மகளும் அதன் உரிமையாளர்கள் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ``ஸ்மிருதி இரானியும் அவர் மகளும் உணவகத்தின் உரிமையாளர்கள் அல்ல. இதில் ஸ்மிருதி இரானியோ அல்லது அவர் மகளோ மதுபான உரிமத்துக்கு விண்ணப்பிக்கவில்லை. மேலும், மதுபான உணவகம் மற்றும் அந்த நிலம் ஸ்மிருதி இரானிக்கோ அல்லது அவர் மகளுக்கோ சொந்தமானது அல்ல. உண்மைகளைச் சரிபார்க்காமல் அவதூறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினரான ஸ்மிருதி இரானியின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்" என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.