Published:Updated:

என் மகள் கல்லூரியில் படிக்கிறாள்; மதுக்கடை நடத்தவில்லை- காங்., குற்றச்சாட்டு குறித்து ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

``என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவள் மதுக்கடையொன்றும் நடத்துவதில்லை. தரவுகளை சரிபாருங்கள்." - ஸ்மிருதி இரானி

என் மகள் கல்லூரியில் படிக்கிறாள்; மதுக்கடை நடத்தவில்லை- காங்., குற்றச்சாட்டு குறித்து ஸ்மிருதி இரானி

``என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவள் மதுக்கடையொன்றும் நடத்துவதில்லை. தரவுகளை சரிபாருங்கள்." - ஸ்மிருதி இரானி

Published:Updated:
ஸ்மிருதி இரானி

மத்திய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, தான் நடத்திவரும் உணவகத்தின் மதுபான உரிமையைப் புதுப்பிக்க இறந்தவரின் ஆவணத்தைச் சமர்ப்பித்தாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, கோவாவின் கலால் கமிஷனர் நாராயண் எம்.காட், ஜூலை 21-ம் தேதி அந்த உணவகத்துக்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இத்தகைய குற்றச்சாட்டினை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, ``18 வயது சிறுமி மீதான பொய் குற்றச்சாட்டுக்கு இரண்டு காங்கிரஸ் ஆட்கள்தான் காரணம். அவள் செய்த ஒரே தவறு, ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் செய்த ரூ.5,000 கோடி கொள்ளை குறித்து அவர் தாயார் செய்தியாளர் சந்திப்பு நடத்திப் பேசியதுதான். என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவள் மதுக்கடையொன்றும் நடத்துவதில்லை. தரவுகளை சரிபாருங்கள், அதில் என் மகளின் பெயர் எங்கே இருக்கிறது? ஆர்டிஐ அடிப்படையில் என் மகள்மீது குற்றம் சுமத்துகிறார்கள். நீதிமன்றங்களிலும், மக்களிடத்திலும் நான் பதில் தேடுவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

ராகுல் காந்தியை மீண்டும் அமேதிக்கு அனுப்புங்கள். ராகுலை மீண்டும் ஒருமுறை நாங்கள் தோற்கடிப்போம்" என்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் ஜோயிஷின் வழக்கறிஞர் கிராத் நாக்ரா, எந்தவொரு அதிகாரியிடமிருந்தும்... எந்த ஷோ-காஸ் நோட்டீஸும் பெறவில்லை என்று கூறினார்.

முன்னதாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, ``பிரதமர் மோடி அரசு, ஸ்மிருதி இரானியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.