Published:Updated:

இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா... ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கூடுதல் பொறுப்பு!

ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா

நுபுர் ஷர்மாவின் கருத்துகளால் சிறுபான்மையினரிடம் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரிசெய்வதற்கு துணை ஜனாதிபதி வேட்பாளராகச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி-யின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா... ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கூடுதல் பொறுப்பு!

நுபுர் ஷர்மாவின் கருத்துகளால் சிறுபான்மையினரிடம் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரிசெய்வதற்கு துணை ஜனாதிபதி வேட்பாளராகச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி-யின் பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, எஃகு துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோர் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக வெளியான தகவலில், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி-யின் மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இந்த நிலையில், அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

அதைத் தொடர்ந்து அவர் நேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பா.ஜ.க-வின் 395 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம் எம்.பி-க்கள் தற்போது யாரும் இல்லை. 15 மாநிலங்களில் 57 இடங்களுக்குச் சமீபத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலின்போது பதவிக்காலம் முடிவடைந்த மூன்று பா.ஜ.க இஸ்லாமிய எம்.பி-க்களில் நக்வியும் ஒருவர். ஆனால் அவர்களில் யாருடைய பெயரும் அடுத்த பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராம் சந்திர பிரசாத் சிங்
ராம் சந்திர பிரசாத் சிங்
ட்விட்டர்

இந்த நிலையில், நுபுர் ஷர்மாவின் கருத்துகளால் சிறுபான்மையினரிடம் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவைச் சரிசெய்வதற்க்கு துணை ஜனாதிபதி வேட்பாளராகச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரை நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதாகவும், அந்தப் பட்டியலில் கேரளா ஆளுநர் முகமது கான், முக்தர் அப்பாஸ் நக்வி-யின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் எஃகு அமைச்சகங்களின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.