Published:Updated:

சர்ச்சைக்குறிய கோவா பீர் பார் விவகாரம்: கணவரின் ஜிஎஸ்டி எண் பகிரப்பட்டதால் ஸ்மிரிதிக்குச் சிக்கல்?

ஸ்மிரிதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கணவரின் ஜி.எஸ்.டி எண் கோவா பீர் பாருடன் பகிரப்பட்டிருப்பது மத்திய அமைச்சருக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சர்ச்சைக்குறிய கோவா பீர் பார் விவகாரம்: கணவரின் ஜிஎஸ்டி எண் பகிரப்பட்டதால் ஸ்மிரிதிக்குச் சிக்கல்?

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கணவரின் ஜி.எஸ்.டி எண் கோவா பீர் பாருடன் பகிரப்பட்டிருப்பது மத்திய அமைச்சருக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஸ்மிரிதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் பீர் பார் நடத்தி வருவதாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு ஸ்மிருதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர்கள்மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர்கள் ட்விட்டரில் பதிவிட்ட தகவல்களை உடனே அகற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் உண்மையில் ஸ்மிருதி இரானியின் கணவர் மட்டுமல்லாது மகள், மகனுக்கும் கோவா பீர் பாரில் பங்கு இருப்பது தெரியவந்திருக்கிறது.

அமைச்சர் ஸ்மிரிதி இரானி
அமைச்சர் ஸ்மிரிதி இரானி

கோவாவில் `சில்லி சோல்ஸ் கோவா கஃபே அண்ட் பார்' இயங்கி வருகிறது. இந்த பாரில்தான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானிக்கு பங்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த பாருக்கான லைசென்ஸ் இறந்து போன ஆண்டனி என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. அதன் உரிமத்தை ஆண்டனியின் மகன் டீன் டி காமா என்பவர் புதுப்பித்திருந்தார். இந்த பீர் பார் செயல்படும் அதே முகவரியில் `எய்டால் ஃபுட் அண்ட் பீவரேஐஸ்' என்ற கம்பெனி செயல்படுகிறது. இந்த கம்பெனியில் ஸ்மிருதி இரானியின் கணவர், மகள்கள், மகனுக்கு பங்கு இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகள்கள், மகனுடன் ஸ்மிருதி இரானி
மகள்கள், மகனுடன் ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானியின் குடும்பத்துக்கு `உக்ரயா மெர்கன்டைல்' `உக்ரயா ஆக்ரோ' ஆகிய இரண்டு கம்பெனிகள் இருக்கின்றன. இந்த இரு கம்பெனிகளும் தலா 50, 25 சதவிகித நிதியை `எய்டால் ஃபுட் அண்ட் பீவரேஜஸ்' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன. இந்தத் தகவலை உக்ரயா மெர்கன்டைல் மற்றும் உக்ரயா அக்ரோ ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தாக்கல்செய்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றன. அதோடு எய்டால் ஃபுட் அண்ட் பீவரேஜஸ் நிறுவனத்தில் ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானியின் ஜி.எஸ்.டி நம்பர் பகிரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்மிருதி இரானியின் குடும்பத்துக்கு பீர் பாரில் பங்கு இருப்பது தெளிவாக தெரிகிறது. சர்ச்சைக்குறிய பீர் பார் உரிமையாளர் டீன் டி காமாவிடம், பீர் பார் இருக்கும் முகவரியில் எய்டால் ஃபுட் அண்ட் பீவரேஜஸ் என்ற கம்பெனி செயல்படுவது குறித்து கேட்டதற்கு, ``எதுவாக இருந்தாலும் என்னுடைய வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

அதோடு ஸ்மிருதி இரானியின் கணவர் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் தன்னை சில்லி சோல்ஸ் கோவா கஃபே அண்ட் பாரின் இணை உரிமையாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இரானியின் மகள் ஜோயிஷ் இரானியும் ஒரு முறை பிரபல சமையல் கலைஞர் ஒருவர் நேர்காணல் நடத்தியபோது சில்லி சோல்ஸ் பாரை தன்னுடைய பார் என்று குறிப்பிட்டிருந்தார். கோவா பாரோடு தொடர்புடைய நிறுவனத்தில் ஸ்மிருதி இரானியின் கணவர் ஜிஎஸ்டி நம்பர் இணைக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் பிரமுகர் கிரீஷ் சோதன்கர் குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் கேட்டதற்கு, `கிரீஷ் இது குறித்து பேச யார் அதிகாரம் கொடுத்தது. அவர் இப்போது காங்கிரஸ் கட்சியிலேயே இல்லை' என்று தெரிவித்தனர். அதிகாரபூர்வமாக ஸ்மிருதி இரானியின் குடும்பத்துக்கு கோவா பீர் பாரில் பங்கு இருப்பது தெரியவந்திருப்பதால்... மத்திய அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.