Published:Updated:

திராவிட மாடல்; Dravidian Stock... ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சியில் அதிகம் புழங்கிய வார்த்தைகள் எவையெவை?

முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு சொல்/தொடர் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தற்போது திராவிட மாடல், சமூக நீதி போல கடந்த ஓராண்டில் ட்ரெண்டிங்கில் இருந்த சில சொற்களும் அதன் பின்னணியும்...

திராவிட மாடல்; Dravidian Stock... ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சியில் அதிகம் புழங்கிய வார்த்தைகள் எவையெவை?

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு சொல்/தொடர் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தற்போது திராவிட மாடல், சமூக நீதி போல கடந்த ஓராண்டில் ட்ரெண்டிங்கில் இருந்த சில சொற்களும் அதன் பின்னணியும்...

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்
ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி
ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி

தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் எப்போதும் இந்தப் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றாலும் இப்போது ஆளுநருடனான சர்ச்சை, மத விவகாரங்கள், மொழி எனப் பல்வேறு வகையில் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஆளும் தரப்பு மட்டும் காரணமல்ல. இந்தச் சர்ச்சையின் பின்னணியில் மிக முக்கியப் பங்காற்றுபவை எதிர்க்கட்சிகள்தான். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும் சொல்லும் விமர்சனங்களுக்கும் ஆளும் தரப்பிலிருந்து பதில் வரும்போது அது விவாதமாக அரசியல் களத்தைப் பரபரபாக்கிவிடுகிறது.

தற்போது ஆட்சியிலிருக்கும் தி.மு.க-வுக்கு அ.தி.மு.க - பா.ஜ.க என இரண்டு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுகின்றன. இதைச் சமாளிக்கத் தி.மு.க தரப்பில் பல்வேறு பதிலடிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் திராவிடம் என்ற சொல் எப்போதும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த வார்த்தையோடு சேர்ந்து `திராவிட மாடல்’ என்பதும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது. இதற்கு மாற்றாக எதிர்தரப்பில் `மோடி மாடல்’, `பா.ஜ.க மாடல்’, `குஜராத் மாடல்’, `ராமராஜ்யம்’ என பா.ஜ.க-வின் கூறி வருகிறார். திராவிடம் என்பதற்கு மாற்றாக இந்துத்துவம் என்ற கோட்பாட்டையும் முன்னிறுத்தி வருகிறார்கள். இப்போது ஹெச்.ராஜா தொடங்கி அண்ணாமலை வரை தாங்களும் திராவிடர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு இந்தச் சொற்றொடர் சண்டை சென்றிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையப் போகிறது. இந்தக் காலகட்டத்தில் இப்படியான வார்த்தைப் போர்கள் அதிகம் நடந்தேறியிருக்கின்றன. அவற்றில் அதிக கவனம் பெற்ற வார்த்தைகள் எவை ஏன் என்பது பற்றி ஒரு ஃபிளாஷ்பேக்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி பதவி ஏற்றுக்கொண்டதும் அடுத்த சில நாள்களுக்கு இந்த வார்த்தைதான் சமூக வலைத்தளம் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் பேசு பொருளாக இருந்தது. அதையடுத்து அந்தப் பெயரில் தி.மு.க-வினர் நூல்கள் எழுதி வெளியிட்டதெல்லாம் நடந்தது.

மின்வெட்டும் அணிலும்

இதையடுத்து மின்வெட்டுப் பிரச்னை ஏற்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை ஏற்பட்டது” எனச் சொல்ல அடுத்து சில நாள்களுக்கு ட்ரெண்டிங்கில் ஏறியது இந்த அணில். செந்தில் பாலாஜியை அணில் அமைச்சர் என்றே இப்போதும் அழைக்க இந்த ஒரு சம்பவம் காரணமாகிவிட்டது. செல்லூர் ராஜூ தொடங்கி இதைச் சொல்லி செந்தில் பாலாஜியைக் கலாய்க்காதவர்கள் யாருமில்லை என்ற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன.

செல்லூர் ராஜூ -செந்தில் பாலாஜி
செல்லூர் ராஜூ -செந்தில் பாலாஜி

ஆட்டுக்குத் தாடியும் ஸ்டேட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை” போன்ற பல்வேறு தொடர்கள் கடந்த ஓராண்டில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. ஆளுநருடன் மாநில அரசு மோதும் இடங்களில் எல்லாம் இந்த வாசகம் மீண்டும் மீண்டும் பேசுபொருள் ஆனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஒன்றிய அரசு’

முதல்வராகப் பொறுப்பேற்றதும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் `ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மத்திய அரசை ஒன்றிய அரசு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து கூறிவந்தாலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதற்குப்பின் பெரிய அளவில் அந்தச் சொல் கவனம் பெற்றுவிட்டது. தி.மு.க அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரை மத்திய அரசு என்று சொல்வதா, ஒன்றிய அரசு எனச் சொல்வதா என்ற விவாதம் தொடர்ந்தது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் “இந்தியாவிலிருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்” என விவாதத்தைத் தொடங்க, “இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று “ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. மாநிலங்கள் எல்லாம் சேர்ந்தது என்பதுதான் அதன் பொருள். ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது; அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம். பயன்படுத்திக்கொண்டே இருப்போம்” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இந்த ஒன்றியம் என்ற சொல் இன்றுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.

"I belong to the Dravidian stock"

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தனது ட்விட்டர் பக்கத்தில், "I belong to the Dravidian stock" என மாற்றியுனார். அதாவது அண்ணாவின் புகழ்பெற்ற வாசகமான "நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" என்பதைத் தனது பயோவில் குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க தரப்பில் பெரும் ஆதரவு எழுந்ததோடு பலரும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் இந்த வாசகத்தைப் பதிவிட்டார்கள். உதயநிதி ஸ்டாலின் இந்த வாசகம் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டோடு பொது இடங்களுக்குச் சென்றார். இந்தச் சொல்லும் முதல்வர் தனது பக்கத்தில் பதிவிட்ட சில நாள்கள் ட்ரெண்டிங்கில் இருந்தது.

அதே போன்று, கடந்த ஓராண்டில் சமூக நீதி என்னும் வார்த்தையும் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது.

இதே போன்று கடந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் கவனம் பெற்ற வார்த்தைகள் இருந்தால் அதனை கமெண்ட்டில் சொல்லுங்கள் மக்களே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism