Published:Updated:

`யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி; ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை;' சட்டசபை ஹைலைட்ஸ்!

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

`யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி; ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை;' சட்டசபை ஹைலைட்ஸ்!

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

Published:Updated:
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கிய தமிழக அரசின் நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. இன்று கூட்டத்தொடரின் கடைசி நாள். கேள்வி நேரத்துடன் தொடங்கிய இன்றைய கூட்டத்தொடரில், நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்குமிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்தநிலையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவைச் தாக்கல் செய்தார் முதல்வர்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

அப்போது பேரவையில் பேசிய முதல்வர். ``ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை திமுக எதிர்த்துவருகிறது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு எந்தத் திறமையும் அதிமுகவு-க்கு இல்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். நீட் தேர்வில் நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவின் அறிக்கையிலிருந்து நீட் தேர்வு நடுநிலையானது இல்லை என்பது தெரிகிறது. நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நம்பிக்கையையும் கனவையும் தகர்த்திருக்கிறது" என்று பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று பேரவையில் பேசிய முதல்வர் விதி எண் 110-ன் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார், ``கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும். உண்மையான பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் விரைவில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வெளியிடப்படும். ஒரே குடும்பத்தில் பலர் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்குக் கடன் விலக்கு வழங்கப்பட மாட்டாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 6,000 கோடி ரூபாய் அளவுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவிருக்கிறது" என்று கூறினார்.

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். புகார் எழுந்ததும் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு கைதுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளும். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் அவர்களின் நலன் கருதி முன்னதாக விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்" என்று சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார் முதல்வர். மேலும், ``காவல்துறையினரின் பணிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம்வைத்துப் பணி மேற்கொண்டார்கள். காவலர்களின் நலனில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது’’ என்று காவல்துறைக்கு முதல்வர் புகழாரம் சூட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism