Published:Updated:

``நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் சிலர் பொறாமை அடைந்திருக்கின்றனர்!" - நிர்மலா சீதாராமன் சாடல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

``இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக்கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அதில் சிக்கல் இருக்கிறது." - நிர்மலா சீதாராமன்

``நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் சிலர் பொறாமை அடைந்திருக்கின்றனர்!" - நிர்மலா சீதாராமன் சாடல்

``இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக்கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அதில் சிக்கல் இருக்கிறது." - நிர்மலா சீதாராமன்

Published:Updated:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைகொண்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83 எட்டியதைச் சுட்டிகாட்டிய காங்கிரஸ் எம்.பி அனுமுலா ரேவந்த் ரெட்டி, ``இந்திய ரூபாய் நாளுக்கு நாள் பலவீனமடைந்துவருவதையும், முதன்முறையாக ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக 83 ரூபாயை எட்டியதையும் அரசாங்கம் கவனிக்கவில்லையா... ரூபாயின் சரிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?'' என்று கேள்வியெழுப்பினார்.

காங்கிரஸ் எம்.பி அனுமுலா ரேவந்த் ரெட்டி
காங்கிரஸ் எம்.பி அனுமுலா ரேவந்த் ரெட்டி

அதோடு 2013-ல் `இன்று ரூபாய் ஐ.சி.யூ-வில் இருக்கிறது. இந்த நபரை ஏன் தமிழ் மக்கள் டெல்லிக்கு அனுப்பினார்கள் என்று தெரியவில்லை' என அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது விமர்சித்ததைக் குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, ``ஐ.சி.யூ-விலிருந்து ரூபாய் வீடு திரும்புவதை உறுதிசெய்ய ஏதேனும் செயல் திட்டம் இருக்கிறதா?’’ எனக் கேட்டார்.

அதற்கு நிர்மலா சீதாராமன், ``ஒவ்வொரு நாணயத்துக்கும் எதிராக இந்திய ரூபாய் வலுவாக இருக்கிறது. மேலும், டாலர்-ரூபாய் ஏற்ற இறக்கம் அதிகமாகாமலிருக்க சந்தையில் தலையிட வேண்டிய அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்தியிருக்கிறது" என்று பதிலளித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மேலும் நிர்மலா சீதாராமன், ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைகொண்டிருக்கின்றனர். இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக்கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அதில் சிக்கல் இருக்கிறது. அதேசமயம், இந்தியாவின் வளர்ச்சி குறித்து அனைவரும் பெருமிதம்கொள்ள வேண்டும். இருப்பினும் சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள்" எனக் கூறினார்.