Published:Updated:

கருத்திருமன் முதல் ஹண்டேவரை - வில்லங்க கேள்விகளுக்கு கருணாநிதியின் சாதுர்யமான பதில்கள்!

கருணாநிதி

1970-ம் ஆண்டு அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன்,`` `அடைந்தால் திராவிட நாடு. இல்லாவிட்டால் சுடுகாடு' என்றீர்கள். இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்” என்று முதல்வராக இருந்த கருணாநிதியைப் பார்த்துக் கேட்டார்.

கருத்திருமன் முதல் ஹண்டேவரை - வில்லங்க கேள்விகளுக்கு கருணாநிதியின் சாதுர்யமான பதில்கள்!

1970-ம் ஆண்டு அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன்,`` `அடைந்தால் திராவிட நாடு. இல்லாவிட்டால் சுடுகாடு' என்றீர்கள். இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்” என்று முதல்வராக இருந்த கருணாநிதியைப் பார்த்துக் கேட்டார்.

Published:Updated:
கருணாநிதி

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் சட்டமன்றம் முக்கியப் பங்காற்றியுள்ளது. குறிப்பாக, இந்திய வரலாற்றிலேயே 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தோல்வியையே சந்திக்காத சட்டமன்ற உறுப்பினர் என்றால், அது கருணாநிதி மட்டுமே. 1957-ம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் நின்று முதன்முதலில் வெற்றிபெற்றதுமுதல் 2016-ம் ஆண்டு திருவாரூர் தொகுதியில் வெற்றிபெற்றதுவரை தாம் சந்தித்த அனைத்துத் தேர்தல் களத்திலும் வெற்றிகண்ட ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே.

கருணாநிதி
கருணாநிதி

சட்டசபை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளையும் சட்டமன்றத்தில் கருணாநிதி வைத்திருந்தார். சட்டமன்றத்தில் கருணாநிதியின் உரையும் அவரது நகைச்சுவை நயமும் பல நேரங்களில் உறுப்பினர்களால் பாராட்டப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டமன்றத்தில் கருணாநிதியின் நகைச்சுவையும், அவரது சமயோசித பதில்களும் பலநேரங்களில் சட்டமன்றத்தில் நிலவி, இறுக்கத்தைத் தளர்த்திய சம்பவமாக மாறிய நிகழ்வும் உண்டு. கருணாநிதி, சட்டமன்றத்தில் பங்கேற்ற காலங்களில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு இது...

சட்டப்பேரவையில் கருணாநிதி
சட்டப்பேரவையில் கருணாநிதி

1973-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்றத்தில் நடைபெற்ற அறநிலையத்துறை தொடர்பான விவாதத்தில் அன்றைய உறுப்பினர் முனுசாமி, ``மதுரை மீனாட்சி அம்மனுக்குப் புதிதாக வைரக்கிரீடம் செய்யப்பட்டுள்ளதா... அதன் விவரம் என்ன” என்று கேள்வியெழுப்ப, அதற்கு அப்போதைய அமைச்சர் கண்ணப்பன், “14 லட்ச ரூபாயில் கிரீடமும் 2 லட்ச ரூபாயில் தங்கக் கவசமும் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே தி.மு.க உறுப்பினர் ஆற்காடு வீராசாமி எழுந்து, ``மீனாட்சியைத் தரிசிக்க வருபவர்கள் அவர் அணிந்திருக்கும் வைர நகைகளைப் பார்த்து அதுபோல நமக்குக் கிடைக்கவில்லையே என்று வீட்டுக்குச் சென்று சண்டை போடுகிறார்களே. ஆண்டவனுக்கு இதுபோன்ற அணிகலன்கள் போடுவதை நிறுத்துவார்களா?" என்று கேட்டார்.

கருணாநிதி
கருணாநிதி

அதற்கு உடனே முதல்வர் கருணாநிதி எழுந்து, ``உறுப்பினர், அவரின் மனைவியை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது” என்று பதிலளித்ததும், அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

அப்போது, தி.மு.க உறுப்பினர் காமாட்சி எழுந்து, “மதுரை மீனாட்சிக்கு உள்ள வைர நகைகளின் மொத்த மதிப்பு எத்தனை கோடி இருக்கும்” என்று கேட்க, அதற்கு உடனே பதிலளித்த கருணாநிதி, ``மீனாட்சிக்கு இருக்கும் சொத்தின் மதிப்பை சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படும்” என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.

1990-ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோது, அன்றைய நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர் செங்கோட்டையன், ``முதலமைச்சர் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்து வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சிப்பிகளைத்தான் எடுத்து வந்திருக்கிறார்” என்று நக்கலாகச் சொன்னார். அதற்கு உடனே கருணாநிதி எழுந்து, “சிப்பிகளை உடைத்துப் பார்த்தால்தான் முத்து கிடைக்கும். சிப்பிக்குள் முத்துபோல இந்த நிதிநிலை அறிக்கை” என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கருத்தையே தனக்குச் சாதகமாக்கிப் பேசினார் கருணாநிதி.

சட்டப்பேரவையில் செங்கோட்டையன்
சட்டப்பேரவையில் செங்கோட்டையன்

1970-ம் ஆண்டு அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன், `` 'அடைந்தால் திராவிட நாடு. இல்லாவிட்டால் சுடுகாடு' என்றீர்கள். இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று முதல்வராக இருந்த கருணாநிதியைப் பார்த்து, கேட்க.... அதற்கு முதல்வர், “சுடுகாட்டில் இல்லை. உங்களோடுதான் உட்கார்ந்திருக்கிறோம்” என்று சொன்னதும், எதிர்க்கட்சியினர் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

1975-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியைக் கொண்டுவந்திருந்தார். அதை எதிர்த்து அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. தி.மு.க ஆட்சியைக் கண்டித்து கண்டனத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தனர், காங்கிரஸ் கட்சியினர்.

அந்தத் தீர்மானத்தை ஆதரித்து அ.தி.மு.க உறுப்பினர் ஹண்டே, “எமர்ஜென்சியை எதிர்த்து தி.மு.க செயற்குழுவில் ஒரு தீர்மானம், கடற்கரை கூட்டத்தில் ஒரு தீரமானம், நெல்லையில் ஒரு தீர்மானம் என்று போட்டுள்ளீர்கள்? எதற்காக இந்த ஒன்றோடொன்று முரண்பாடு” என்று கேள்வியெழுப்பினார்.

கருணாநிதி
கருணாநிதி

அதற்கு கருணாநிதி, “ஹண்டே கேட்பதைப் பார்த்தால் எமர்ஜென்சியை எதிர்த்து நாங்கள் இன்னும் வேகமாகப் போயிருக்க வேண்டும் என்று சொல்வதுபோல் இருக்கிறது” என்று பதில் கொடுத்தார். இதே விவாதத்தில் அ.தி.மு.க-வின் உறுப்பினராக இருந்த சீனிவாசன், “நெருக்கடி நிலையைக் கண்டித்து செயற்குழுவில், பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் சொல்லிவருகிறீர்கள். அதற்கு இந்த அவையிலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பலாமே" என்றார்.

உடனே கருணாநிதி, “களம் செல்லும் வீரனுக்குத் தெரியும்... எந்தக் கையில் வாள் ஏந்துவது, எந்தக் கையில் கேடயம் ஏந்துவது” என்று சொன்னதும், சிரித்தபடியே அமர்ந்துவிட்டார் சீனிவாசன். கருணாநிதி சொன்ன பதிலையே தலைப்பாக வைத்து வாளும் - கேடயமும் என்ற புத்தகம் வெளியானது.

எம்.ஜி.ஆர்.- ஹண்டே
எம்.ஜி.ஆர்.- ஹண்டே

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்தநாயகி ஒருமுறை சட்டப்பேரவையில், “பேரவை லாபிகளில் சி.ஐ.டி-க்கள் வருகிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கிறார்கள். நான் நேற்றுகூட லாபியில் சி.ஐ.டி அதிகாரிகளைப் பார்த்தேன்” என்றார். உடனே முதல்வராக இருந்த கருணாநிதி, “நீங்கள் பார்த்து தெரிந்துகொள்கிற அளவுக்கு இருந்தால் அவர் சி.ஐ.டி-க்களாகவே இருக்க மாட்டார்கள்” என்று நயமாகப் பதில்சொல்ல மறுபதில் இல்லாமல் அமர்ந்துவிட்டார் அனந்தநாயகி.

1990-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ராஜேந்திரன் என்ற உறுப்பினர், “பழனி போன்ற கோயில்களில் முடி காணிக்கையாகத் தரப்படுகிறது. அந்த முடியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க முடியுமா" என்று கேட்க, ``முடி“யும் என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தார், முதல்வராக இருந்த கருணாநிதி.

அண்ணா- கருணாநிதி
அண்ணா- கருணாநிதி

அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹண்டே, “கோயிலின்பால் கருணையுள்ளம் கொண்ட முதல்வர், அர்ச்சகர்களின் வாழ்வு முன்னேறுவதற்கு உறுதியளிப்பாரா" என்று கேட்டார்.

அதற்கு கருணாநிதி, “அர்ச்சகர்களை ஆண்டவர்கள் கவனிக்காவிட்டாலும், இப்போது ஆள்கிறவர்கள் நிச்சயம் கவனிப்பார்கள்” என்று சொன்னதும் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism