Published:Updated:

``3 பெயர்களைப் பரிந்துரைதேன்; ஆனால் சோனியா காந்தி என்னை வழிநடத்தச் சொன்னார்!" - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

``கூட்டுத் தலைமையை நான் நம்புகிறேன். கட்சியை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல அனைத்து உறுப்பினர்களுடன் நான் இணைந்து செயல்படுவேன்." - மல்லிகார்ஜுன கார்கே

``3 பெயர்களைப் பரிந்துரைதேன்; ஆனால் சோனியா காந்தி என்னை வழிநடத்தச் சொன்னார்!" - மல்லிகார்ஜுன கார்கே

``கூட்டுத் தலைமையை நான் நம்புகிறேன். கட்சியை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல அனைத்து உறுப்பினர்களுடன் நான் இணைந்து செயல்படுவேன்." - மல்லிகார்ஜுன கார்கே

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

2014 முதல் காங்கிரஸ் கண்ட தொடர்ச்சியான தோல்விகளின் எதிரொலியாக, கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் விதமாக வரும் அக்டோபர் 17-ம் தேதி காங்கிரஸில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியே மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்று வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தபோதிலும், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. அதன்பிறகு, கட்சியில் பல்வேறு சலசலப்புக்குப் பின்னர், காங்கிரஸ் எம்.பி சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது போட்டியிலிருக்கின்றனர்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

இருப்பினும், கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் பலரும், மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் , தேர்தலிலிருந்து சசி தரூர் விலகிவிட்டதாக வதந்திகள் வெளியாக, உடனடியாக `நான் இன்னும் விலகவில்லை, 17-ம் தேதி எனக்கு வாக்களியுங்கள்' என சசி தரூர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தன்னை கட்சியை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டார் என மல்லிகார்ஜுன கார்கே கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

அஸ்ஸாமில் வடகிழக்கு மாநில காங்கிரஸ் உறுப்பினர்களிடையே உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, ``ஆலோசனை மற்றும் கூட்டுத் தலைமையை நான் நம்புகிறேன். கட்சியை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல அனைத்து உறுப்பினர்களுடன் நான் இணைந்து செயல்படுவேன்" என்று கூறினார். சோனியா காந்தி, என்னை அவரது வீட்டுக்கு அழைத்து காங்கிரஸை வழிநடத்தும்படி கேட்டுக் கொண்டார். நான் மூன்று பெயர்களைப் பரிந்துரைக்கலாம் என்று அவரிடம் சொன்னேன், ஆனால் அவர் பெயர்களைக் கேட்காமல். கட்சியை வழிநடத்துமாறு என்னிடம் கூறினார்" என மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.