Published:Updated:

``அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்திரிப்பதா?!'' - சோனியா காந்தி கண்டனம்

சோனியா காந்தி

``அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்திரிப்பதை காங்கிரஸ் ஏற்காது” என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

``அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்திரிப்பதா?!'' - சோனியா காந்தி கண்டனம்

``அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்திரிப்பதை காங்கிரஸ் ஏற்காது” என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சோனியா காந்தி

சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும், கடந்த 1947-ம் ஆண்டு நடந்த தேசப்பிரிவினை குறித்தும் பாஜக சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் இந்தியப் பிரிவினை நடந்தபோது காங்கிரஸ் தலைமையில் இருந்த ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரைக் குற்றம்சாட்டியிருந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``கடந்த 75 ஆண்டுகளில், நாம் நிறைய சாதித்திருக்கிறோம். இந்தியா திறமையான இந்தியர்களின் கடின உழைப்பால் அறிவியல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சர்வதேச அரங்கில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்திருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியா, தனது தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவர்களின் தலைமையில் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான தேர்தல் முறையை நிறுவியது. அதே நேரத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புகளை வலுப்படுத்தியது. எப்போதும் உலக நாடுகளுக்கு ஒரு முன்னணி நாடாக இந்தியா தனது பெருமையை அடையாளப்படுத்தியிருக்கிறது.

அரசியல் ஆதாயத்துக்காக வரலாற்று உண்மைகளைத் தவறாகச் சித்திரிப்பதையும், காந்தி, நேரு, பட்டேல், ஆசாத் ஜி போன்ற சிறந்த தேசியத் தலைவர்கள் குறித்து பொய்யான பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். ஜவஹர்லால் நேரு பற்றிய தவறான அறிக்கைகளை காங்கிரஸ் பொறுத்துக்கொள்ளாது. தேசத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். திறமையே புதிய இந்தியாவின் அடிப்படையாக அமையும்'' என குறிப்பிடப்பட்டிருக்கிறது.