Published:Updated:

பிசிசிஐ தலைவர் தேர்தல்: "கங்குலி மீதான அரசியல் பழிவாங்கல்..." - திரிணாமுல் காங்கிரஸ் காட்டம்

கங்குலி, ஜெய் ஷா

``கங்குலி, பா.ஜ.க-வில் சேருவார் என்ற செய்தியை பா.ஜ.க பரப்ப முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.” - திரிணாமுல் காங்கிரஸ்

பிசிசிஐ தலைவர் தேர்தல்: "கங்குலி மீதான அரசியல் பழிவாங்கல்..." - திரிணாமுல் காங்கிரஸ் காட்டம்

``கங்குலி, பா.ஜ.க-வில் சேருவார் என்ற செய்தியை பா.ஜ.க பரப்ப முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.” - திரிணாமுல் காங்கிரஸ்

Published:Updated:
கங்குலி, ஜெய் ஷா

பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி நியமிக்கப்படலாம் என்ற செய்தி, பா.ஜ.க-வின் அரசியல் ஏமாற்றத்தை வெளிச்சமாகியிருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் செய்தியாளர்களிடம், "கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கங்குலி, பா.ஜ.க-வில் சேருவார் என்ற செய்தியை பா.ஜ.க பரப்பியது. ஆனால் நடக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கங்குலி
கங்குலி

அதனால், தற்போது, 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினரான ரோஜர் பின்னி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். மேலும் அக்டோபர் 18-ம் தேதி மும்பையில் பிசிசிஐ-ன் வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்தும் போது, போட்டியின்றி அவருக்கு உயர் பதவியைப் வழங்க வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இரண்டாவது முறையாகத் தொடரலாம். ஆனால் கங்குலி அதன் தலைவராக இருக்க முடியாது என்பது அரசியல் பழிவாங்குதலுக்கான ஒரு எடுத்துக்காட்டு. கங்குலியை அவமானப்படுத்த பா.ஜ.க முயற்சி செய்வதாக தெரிகிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

இதற்கு பதிலளித்த பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், "கங்குலியை அவரது ஆதரவாளர்களால் "கல்கத்தா இளவரசர்" என்று அழைக்கப்படுவது போல, கட்சி ஒருபோதும் தனது மடியில் அவரை வைத்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. எனவே, இவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். கங்குலியை பா.ஜ.க எப்போது கட்சியில் சேர்க்க முயன்றது என்பது எங்களுக்கே தெரியாது.

கங்குலி
கங்குலி

கங்குலி ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். சிலர் தற்போது பிசிசிஐ-யில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றபோது இப்போது வருந்துபவர்களின் பங்கு ஏதாவது அவருக்கு இருந்ததா? திரிணாமுல் ஒவ்வொரு பிரச்னையையும் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்," என்று கூறினார்.