எல்லாக் கடல்களிலும் அலைகள் எழும்பும். தென் சீனக் கடலில் மேலதிகமாகச் சர்ச்சைகளும் கொந்தளிக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சர்ச்சைகள் ஓயவில்லை. இந்தச் சர்ச்சைக் கடலுக்குள்தான் ஜூலை 13 அன்று அமெரிக்காவும் குதித்திருக்கிறது.

அன்றைய தினம் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ, ‘தென் சீனக் கடலில் சீனா கோரிவரும் உரிமைகளும், கட்டியிருக்கும் கடற்தளங்களும் சட்டவிரோதமானவை’ என்று விமர்சித்திருக்கிறார். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத சீனா அடுத்த இரண்டாவது நாளே ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் தென் சீனக் கடல் தீவுத் தொகுதிகளில் பிரமாண்டமான விமானப்படை ஒத்திகையை நிகழ்த்தியிருக்கிறது. சீனாவின் ஜே-11 பி ரக போர் விமானங்கள் பாராசெல் தீவுகளில் அணிவகுத்திருப்பதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதனால், ஒட்டுமொத்த சர்வதேச கவனமும் தென் சீனக் கடற்பகுதியை நோக்கித் திரும்பியிருக்கிறது!

தென் சீனக் கடலின் பரப்பு 35 லட்சம் சதுர கிலோமீட்டர். இரண்டாம் உலகப் போருக்கு முன் இதன் பெரும் பகுதி ஜப்பானிய முடியரசின் ஆதிக்கத்தில் இருந்தன. போரில் ஜப்பான் சரணடைந்தது. அன்றைக்கு சீனா, வெற்றிபெற்ற நேச நாடுகளின் பக்கம் இருந்தது. அப்போது சீனாவை ஆட்சி செய்த கோமிங் டாங் கட்சி இந்தப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடியது. மேலும்,

1947-ம் ஆண்டு தென் சீனக் கடலில் ‘உடைகோடு-ஒன்பது’ (Nine-dash Line) என்றொரு கடல் எல்லையை நிர்ணயித்து, `அந்த எல்லைக்கு உள்ளே வரும் பகுதிகள் அனைத்தும் சீனாவுக்கே சொந்தம்’ என்றது. 1949-ல் மா சே துங்கின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்தபோது, இந்த எல்லை மேலும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. இதற்கு சாதகமாக வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாகவும் சொன்னது.

சீனாவை உரசும் ஐந்து நாடுகள்

1950 மற்றும் 1960-களில் தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, புரூணை ஆகிய ஐந்து நாடுகளும் இந்த உரிமை கோரலில் கவனம்கொள்ளவில்லை. ஆனால், 1970-களில் அவை விழித்துக்கொண்டன. இப்போதுவரை எதிர்ப்பைக் காட்டிவருகின்றன. தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள இந்த ஐந்து நாடுகளுடன் சீனா வெகுகாலமாக உரசிக் கொண்டிருக்கிறது. கடல் பகுதிகள் மட்டுமல்ல... ஆளில்லாத பாராசெல், ஸ்பார்ட்லைஸ் முதலான நூற்றுக்கணக்கான தீவுத் தொகுதிகளுக்கான உரிமையிலும் சர்ச்சை இருக்கின்றன. பாராசெல் தீவுகளுக்கு அவற்றின் அருகிலுள்ள வியட்நாமும் தைவானும் உரிமை கோருகின்றன. அதேபோல ஸ்பார்ட்லைஸ் தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூணை ஆகிய நாடுகள் உரிமை கோருகின்றன.

சீனா இந்தக் கோரிக்கைகளைப் புறந்தள்ளியது. இந்தத் தீவுகளில் தளங்களை அமைத்துவருகிறது. ராணுவப் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. சரி, இந்தப் பகுதி சீனாவுக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது? ஏனெனில், இந்தத் தீவுத் தொகுதி களைச் சுற்றிலும், அவற்றின் அடியாழத்திலும் எண்ணெய் வளமும் எரிவாயுவும் புதைந்து கிடக்கின்றன. கடல்மடி கொள்ளாத மீன்வளம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கடல் மார்க்கமாகத்தான் உலகெங்கும் ஏற்றுமதியாகும் சரக்குகளில் மூன்றில் ஒரு பங்கு தத்தமது இலக்கை அடைகின்றன. ஆண்டுதோறும் 250,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் இந்தக் கடல்வழிப் பாதையைக் கடக்கின்றன.

`2014-க்குப் பிற்பாடு சீனா, தீவுத் தொகுதிகளில் அமைத்திருக்கும் கடற்தளங்களின் பரப்பு 3,000 ஏக்கரைத் தாண்டும்’ என்று செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் மதிப்பிட்டிருக்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு நிறுவனம். இப்படியான ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த தென் சீனக் கடல் நாடுகளால் முடியவில்லை. என்றாலும், அவை சீனாவின் ஆக்கிரமிப்பைப் பலவாறாக எதிர்த்துவருகின்றன. 1974-லும் 1988-லும் வியட்நாம், சீனக் கடற்படையுடன் மோதியது. வியட்நாம் மாலுமிகளும் ஜவான்களும் கொல்லப்பட்டார்கள். 2012-ல் சீனாவின் சில மீன்பிடிப் படகுகள் எல்லை மீறியதாகச் சொல்லி பிலிப்பைன்ஸ் கப்பலொன்று அவற்றைக் கைப்பற்றியது. தொடர்ந்து கடற்பரப்பில் பதற்றம் பற்றிக்கொண்டது. இரண்டு கடற்படைகளும் நேருக்கு நேர் நின்றன.

2013-ல் பிலிப்பைன்ஸ் இந்தப் பிரச்னையை ஐ.நா-வுக்குக் கொண்டு சென்றது. ஐ.நா ஒரு தீர்ப்பாயத்தை நியமித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2016-ல் அந்தத் தீர்ப்பாயம், ‘சீனா கோரும் உரிமைகளுக்கு வரலாற்றுரீதியாக ஆதாரம் இல்லை; சீனாவின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதம்’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பை ஏற்க மறுத்தது சீனா. ஐ.நா அமைப்பால் தீர்ப்பு மட்டுமே சொல்ல முடியும். அதை அமல்படுத்தவோ... அமல்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளை வற்புறுத்தவோ முடியாது. அப்படியான அதிகாரம் அதற்கு இல்லை. இந்தத் தென் சீனக் கடல் நாடுகள் அனைத்தும் தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியா’னில் அங்கம்வகிக்கின்றன. கடந்த ஜூன் 26-ம் தேதி அன்று நடந்த ஆசியான் மாநாட்டில் பிலிப்பைன்ஸும் வியட்நாமும் தென் சீனக் கடலில் சீனாவின் போக்குக்கு எதிராகக் குரல் கொடுத்தன.

அமெரிக்கா பராக்!

இந்த நிலையில்தான் சீனாவுக்கு எதிராகக் ‘கடல்’ இறங்கியிருக்கிறது அமெரிக்கா. ‘தென் சீனக் கடல் ஒன்றும் சீனாவின் சாம்ராஜ்யம் அல்ல’ என்று கடுமையாகவே சாடியிருக்கிறது. இது போதாதென்று இரண்டு விமானம் தாங்கும் போர்க் கப்பல்களை தென் சீனக் கடலுக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தென் சீனக் கடல் நாடுகள் பெரிதாக ஆதரிக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

மலேசியா மௌனமாக இருந்தது. எண்ணெய் விலை இறக்கத்தால் துவண்டுபோயிருக்கும் புரூணை சுல்தான் அடக்கிவாசித்தார். ‘தைவானே அகண்ட சீனத்தின் ஒரு பகுதிதான்’ என்று சீனா சொல்லிவருவதால், சுற்றியுள்ள கடற்பரப்பைக் குறித்த தைவானின் கோரிக்கைகளை சீனா பொருட்படுத்தாது. அமெரிக்காவின் அறிவிப்பை வியட்நாம் வரவேற்றது. ஆனால் மேலதிகமாகத் தனது குரலை உயர்த்தவில்லை. பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்பை அவ்வப்போது காட்டிவரும் நாடு. அமெரிக்க அறிவிப்புக்கு அடுத்த நாளே பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சருடன் பேசியது சீனா. வியட்நாம் வெளியுறவு அமைச்சருடனும் ஜூலை 21 அன்று பேசியது. தொடர்ந்து, ‘தென் கிழக்கு ஆசிய நாடுகளிடையே கலகம் செய்ய வேண்டாம்’ என்று அமெரிக்காவை எச்சரித்தது சீனா.

ஏன் அமெரிக்காவுக்கு ஆதரவு இல்லை?

தாங்கள் ஆண்டாண்டு காலமாகக் கோரிவருகிற உரிமைகளை உலகின் ஆகப் பெரிய ஒரு வல்லரசு ஆதரிக்கிறபோது, ஏன் தென் சீனக் கடல் நாடுகள் ஆதரிக்கவில்லை? 2016-ல் ஐ.நா-வின் தீர்ப்பாயம் சீனாவுக்கு எதிராகவும், பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தபோது, `இது உள்-கடல் பிரச்னை... இதை சீனாவும் தென் கிழக்காசிய நாடுகளும்தான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றது அமெரிக்கா. தீர்ப்பு வெளியாகி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு இப்போது என்ன திடீர் கரிசனம் என்கிற ஐயம் இந்த நாடுகளுக்கு இருக்கிறது.

வருகின்ற நவம்பரில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதற்காக சீனாவை அமெரிக்காவின் எதிரியாகக் கட்டமைத்துவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சீனாவுடன் வர்த்தகப் போர் தொடுத்துவருகிறார். சீனப் பொருள்களுக்குத் தீர்வை விதிக்கிறார். சீனத் தொழில்நுட்பங்

களுக்குத் தடை விதிக்கிறார். `கொரோனா பரவலுக்குச் சீனாவே காரணம்’ என்கிறார். ஹாங்காங் தன்னாட்சி மாநிலத்தில், சீனாவின் ஒன்றிய அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது; இதனால் ஹாங்காங்குக்கு வழங்கிவந்த சிறப்புத் தகுதியை திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். இவைபோலவே, இப்போதைய தென் சீனக் கடல் எச்சரிக்கையும் சீன எதிர்ப்பை மையமாக்கி ட்ரம்ப் கட்டியமைக்கும் வாக்கு வங்கியின் ஒரு பாகம்தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள். தென் சீனக் கடல் நாடுகளும் அப்படியே கருதியிருக்கலாம்.

தவிர, அமெரிக்கா-சீனா இடையிலான புதிய பனிப்போரில் தாங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அந்த நாடுகள் கருதியிருக்கலாம். சீனாவுடனான தங்களது பிரச்னையைத் தாங்களே தனியாகவோ அல்லது கூட்டாகவோ, சீனாவுடன் பேசியோ அல்லது உரசியோ தீர்த்துக்கொள்ளலாம், அதுதான் உசிதம் என்பது அந்த நாடுகளின் கருத்தாக இருக்கலாம்.

என்ன நினைக்கிறது இந்தியா?

இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ‘இது சர்வதேச கடல்வழிப் பாதை. சட்டரீதியான வணிகப் போக்குவரத்துக்கு இங்கு எல்லா சுதந்திரமும் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது இந்தியா. இந்த அறிவிப்பில் சீனாவைப் பற்றி எந்தக் குறிப்புமில்லை. அமெரிக்காவின் பெயரும் இடம்பெறவில்லை.

இதற்கு முன்னரும், தென் சீனக் கடல் உள்ளிட்ட சீனா தொடர்பான கூறுகளைப் பற்றிக் கருத்து சொல்வதை இந்தியா பெரும்பாலும் தவிர்த்துவந்திருக்கிறது. ஆனால், ஜூன் 15 கல்வான் கலவரத்துக்குப் பிறகு வேறு. அதனால், இப்போதைய இந்தியாவின் எதிர்க்குரல் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். இந்தியா ‘நாற்கரம்’ என்கிற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டிருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது, அமெரிக்கா - ஆஸ்திரேலியா - ஜப்பான் - இந்தியா ஆகிய நான்கு நாடுகள் அமைத்திருக்கும் கூட்டணியே நாற்கரம் (Quadrilateral-Quad). இது ஒரு சீன எதிர்ப்புக் கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு சர்வதேச உறவுகள் ஆயுத பலத்தால் மட்டுமல்ல... உற்பத்திச் சக்தி, வணிக உறவுகள் முதலான காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சர்வதேச அரங்கில் மதிப்பான இடத்தைப் பெறுவதற்கு உற்பத்தியிலும் வணிகத்திலும் மேலான இடம் நோக்கிச் செல்ல வேண்டும். இது உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். நமக்கு நீண்டகாலப் பயனும் விளையும். தென் சீனக் கடல் நாடுகள் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

தென் சீனக் கடல் கொந்தளிக்கிறது. கடல் மட்டத்தில் தெரியும் கொந்தளிப்புகள் விரைவில் அடங்கிவிடும். அடியாழத்தில் சுழுலும் கொந்தளிப்புகள் அடங்க அதிக காலம் வேண்டியிருக்கும்.