Published:Updated:

``இப்படி ஒரு வெற்றி தேவையா?!” - கோவையில் திமுக-வுக்கு எதிராகக் கொதித்த வேலுமணி

வேலுமணி

திமுக அரசைக் கண்டித்து, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கொதித்துப் பேசினார்.

``இப்படி ஒரு வெற்றி தேவையா?!” - கோவையில் திமுக-வுக்கு எதிராகக் கொதித்த வேலுமணி

திமுக அரசைக் கண்டித்து, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கொதித்துப் பேசினார்.

Published:Updated:
வேலுமணி

திமுக அரசைக் கண்டித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தைக் காக்கிற ஒரே கட்சி அதிமுக-தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொய் வழக்கு போடுவது வழக்கம். கள்ள ஓட்டுப் போட வந்தவரை ஜெயக்குமார் ஓடிப் போய் பிடித்துக்கொடுத்தார். போலீஸ் செய்யவேண்டியதை அவர் செய்திருக்கிறார்.

கோவை அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை அதிமுக ஆர்ப்பாட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினசரி திமுக குறித்த விமர்சனங்களை ஊடகங்களில் பகிர்வார். அதனால்தான் அவரைக் கைதுசெய்துள்ளனர். கோவை காவல்துறை மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. போலீஸை வைத்தே கொலுசு, ஹாட்பாக்ஸ், பணம் என எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு எங்கள் மீது வழக்கு போடுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்களுக்கு நேர்மையாகத்தான் தேர்தலைச் சந்திக்கத் தெரியும். மெஷினை எல்லாம் மாற்ற தெரியாது. நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் கோவை மாநகராட்சியில் நாங்கள் 85 வார்டுகளைக் கைப்பற்றியிருப்போம். அதை அப்படியே மாற்றிவிட்டனர். விஞ்ஞான முறையில் எங்களைத் தோற்கடித்துள்ளனர். மோசமான ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது.

வேலுமணி
வேலுமணி

இது செயற்கையான வெற்றி. இதையெல்லாம் மீறி வெள்ளலூர் பேரூராட்சியை நாங்கள் பிடித்துள்ளோம். அதனால், காவல்துறை எங்கள் உறுப்பினர் மீது வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு திமுக-வினருக்கு அடிமையாக உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு காவல்துறை வேறு வேலை பார்க்கலாம். திமுக-வினர் என்ன செய்துவிடுவார்கள்... அதிமுக-வினர் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். தேர்தல் முடிந்ததும் நாங்கள் மக்களிடம் சர்வே நடத்தினோம். அனைவரும் இரட்டை இலைக்குத்தான் வாக்களித்தோம் என்று கூறுகின்றனர். இப்படி ஒரு வெற்றி தேவையா... கோவையில் நடக்கும் அத்தனை திட்டங்களும் நாங்கள் கொண்டு வந்தவைதான்.

கோவை
கோவை

மேயர் வரப்போகிறார். இனியாவது மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். அதிகாரிகள், போலீஸுடன், திமுக கூட்டணி போட்டு மக்களைத் தோற்கடித்துவிட்டீர்கள். காவல்துறை எல்லாவற்றையும் இதனுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism