Published:Updated:

``எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆனதை தமிழ்நாடே கொண்டாடுகிறது" - கோவையில் வேலுமணி

வேலுமணி

``கடந்த ஒரு மாதமாக பத்திரிகை, ஊடகங்களில் வேறு எந்தச் செய்தியும் இல்லை. எடப்பாடியார் பற்றிய செய்தி மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது." - வேலுமணி

``எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆனதை தமிழ்நாடே கொண்டாடுகிறது" - கோவையில் வேலுமணி

``கடந்த ஒரு மாதமாக பத்திரிகை, ஊடகங்களில் வேறு எந்தச் செய்தியும் இல்லை. எடப்பாடியார் பற்றிய செய்தி மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது." - வேலுமணி

Published:Updated:
வேலுமணி

அதிமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவைக்கு வந்தார். அவருக்கு அதிமுக-வினர் விமான நிலையம் முதல் கட்சி அலுவலகம் வரை உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வேலுமணி
வேலுமணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது அவர், ``தமிழ்நாட்டு மக்களே ஆவலுடன் நடக்க வேண்டும் என எதிர்பார்த்தது நடந்துவிட்டது. எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தமிழகமே கொண்டாடுகிறது. அதிமுக மீண்டும் வர வேண்டும் என மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஓராண்டாக கோவையில் எந்த வேலையும் நடக்கவில்லை. மக்கள் எதிர்பார்க்கும் மக்களாட்சி அமைய, எடப்பாடி அண்ணன் முதல்வராக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அண்ணன் எடப்பாடியாரை பொதுச்செயலாளராக்க அரும்பாடுபட்டு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கடந்த ஒரு மாதமாக பத்திரிகை, ஊடகங்களில் வேறு எந்தச் செய்தியும் இல்லை. எடப்பாடியார் பற்றிய செய்தி மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது. எடப்பாடியார் மீண்டும் முதல்வராகவிருப்பதை இந்த எழுச்சி உறுதிசெய்கிறது.

நான்கரை ஆண்டுக்காலம் அருமையாக ஆட்சி செய்து, அம்மா கொண்டுவர வேண்டும் என்று நினைத்த திட்டங்களையெல்லாம் எடப்பாடியார் நிறைவேற்றினார். நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றியைப் பெறும். வருகின்ற தேர்தல்களில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி உறுதி.

வேலுமணி
வேலுமணி

எப்போதும்போல மூத்த நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக இணைந்து பயணிப்போம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார்” என்றார்.