Published:Updated:

``ஒரு வாரம்தான் கெடு!" - கோவை மாநகராட்சியை எச்சரிக்கும் வேலுமணி

வேலுமணி

``பாதிப்புகளைப் பார்வையிடுவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தேன். ஓர் அதிகாரியும் வரவில்லை." - வேலுமணி

``ஒரு வாரம்தான் கெடு!" - கோவை மாநகராட்சியை எச்சரிக்கும் வேலுமணி

``பாதிப்புகளைப் பார்வையிடுவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தேன். ஓர் அதிகாரியும் வரவில்லை." - வேலுமணி

Published:Updated:
வேலுமணி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை குனியமுத்தூர் பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வுசெய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வேலுமணி, “கோவை மாநகராட்சி 87, 88-வது வார்டுகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது.

வேலுமணி
வேலுமணி

20 நாள்களாக தொடர்மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் இந்தப் பகுதியில் மழைநீர் தேங்கும். செங்குளம் நிறையும்போது தண்ணீர் நிறையும். அ.தி.மு.க ஆட்சியில் மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை பாதிப்புகளை பார்வையிடுவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தேன். ஓர் அதிகாரியும் வரவில்லை, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இனியாவது சரிசெய்யுங்கள். ஆட்சியைப் பார்க்காமல் அதிகாரிகள், மக்களைப் பார்த்து வேலை செய்யுங்கள்.

கோவை
கோவை

எந்தச் சாலையிலும் நடக்க முடியவில்லை. எல்லாச் சாலைகளும் மோசமாக இருக்கின்றன. 500 சாலைப் பணிகளை ரத்துசெய்திருக்கிறார்கள். நிதி இல்லை எனச் சொல்லக் கூடாது. மக்களுக்கு வேலை செய்ய வேண்டும்.

சென்னையில் நாங்கள் செய்த வேலையைத் தவிர வேறு எதையும் இவர்கள் செய்யவில்லை. கோவை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம். பணிகளைச் செய்யவில்லையெனில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். நாங்கள் செய்த பணிகள் மக்களுக்குத் தெரியும்.

சென்னை மழை
சென்னை மழை

முதலமைச்சர் சொல்வதுபோலவெல்லாம் மக்கள் பாராட்டவில்லை. சென்னையில் மழைநீர் தேங்காததற்கு நாங்கள் செய்த பணிகளே காரணம். மழைநீர் வடிகால் நாங்கள் கட்டியது. டிவி-யில் விளம்பரம் செய்து நடிக்காமல் வேலை செய்யுங்கள்" என்றார்.