Published:Updated:

``அதிமுக பிரச்னையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை..!” - சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

``அதிமுக தற்போது நான்கு பிரிவாக இருக்கிறது. அவர்கள் நான்கு பிரிவாகப் பிரிந்ததற்கு திமுக காரணமில்லை” என அப்பாவு தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக பிரச்னையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை..!” - சபாநாயகர் அப்பாவு

``அதிமுக தற்போது நான்கு பிரிவாக இருக்கிறது. அவர்கள் நான்கு பிரிவாகப் பிரிந்ததற்கு திமுக காரணமில்லை” என அப்பாவு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சபாநாயகர் அப்பாவு

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவரும் அதிமுக-வில் உட்கட்சிப் பிரச்னை பல நாள்களாக நிலவிவருகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணி என அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட சில குழப்பங்கள் நிலவிவருகின்றன. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ``ஓபிஎஸ், இபிஎஸ் எழுதியுள்ள கடிதம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். சட்டமன்ற அதிமுக துணைத் தலைவர் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவரே கூறியிருக்கிறார். சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு. சட்டமன்றத்துக்கு இருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயக முறையில் நியாயமாக முடிவெடுப்போம்.

அதிமுக தற்போது நான்கு பிரிவாக இருக்கிறது. அவர்கள் நான்கு பிரிவாகப் பிரிந்ததற்கு திமுக காரணமில்லை. அதிமுக-வில் உள்ள உட்கட்சிப் பிரச்னைகளில் தலையிட்டு நாங்கள் குளிர்காய விரும்பவில்லை. எங்களுக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம். சட்டமன்றத்துக்கென தனி அதிகாரங்கள் இருக்கின்றன. அதன்படி நடந்துகொள்வோம்'' என்றார்.