Published:Updated:

‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!

‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!
பிரீமியம் ஸ்டோரி
‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!

கரூர் மாவட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்களை அடுக்குகிறார்கள் கட்சியின் பாரம்பர்ய தி.மு.க நிர்வாகிகள்

‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!

கரூர் மாவட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்களை அடுக்குகிறார்கள் கட்சியின் பாரம்பர்ய தி.மு.க நிர்வாகிகள்

Published:Updated:
‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!
பிரீமியம் ஸ்டோரி
‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!

கட்சியின் 15-வது உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறது தி.மு.க. முதற்கட்டமாக, கிளைக்கழகத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஒன்றியக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில்தான், ஏக ரணகளக் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. விருப்பமனு தாக்கல் செய்ய வந்த இளைஞரணி நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தேனியில் போலீஸ் புகார் வரை சென்றிருக்கிறது. தி.மு.க-வை அதிரிபுதிரி ஆக்கியிருக்கும் ஒன்றியச் செயலாளர் தேர்தல் குறித்து கள நிலவரத்தை அறிய, களமிறங்கினோம்...

தேனி தெற்கு மாவட்டத்தில், இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள உத்தமபாளையம் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு, மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணனால் தேர்வுசெய்யப்பட்ட அணைப்பட்டி முருகேசன், பண்ணைபுரம் குமரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், பண்ணைபுரத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் ஹக்கிம் என்பவரும் விருப்ப மனு கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது நடந்த தகராறில், ராமகிருஷ்ணன் ஆதரவாளரான ஒன்றியச் செயலாளர் முருகேசன், ஹக்கிமைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹக்கிம் அளித்த புகாரில் நான்கு பேர்மீது சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸ் வரை விவகாரம் சென்றுவிட்டதால், தேனி தி.மு.க-வில் அனல் பறக்கிறது.

‘காந்தி சிரித்தால் ஒன்றியப் பதவி...’ - தி.மு.க-வில் ரணகளம்!

கரூர் மாவட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்களை அடுக்குகிறார்கள் கட்சியின் பாரம்பர்ய தி.மு.க நிர்வாகிகள். “அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி வந்ததும், எல்லா ஒன்றியங்களிலும் தனது ஆதரவாளர்களை நியமிக்கப் பார்த்தார். ஆனால், கட்சிக்குள் புகைச்சல் வராமல் தடுக்க, ஒவ்வொரு ஒன்றியத்தையும் இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து, ஒன்றில் பழைய ஆள், மற்றொன்றில் அவரின் ஆதரவாளர் என டெக்னிக்காக நியமித்தார். இப்போது, கட்சிக்குள் தன்னை பலமாக நிலை நிறுத்திக்கொண்டதால், பதவியிலிருக்கும் பழைய தி.மு.க-வினர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, தனது ஆதரவாளர்களை அனைத்து இடங்களிலும் நியமிக்க முயல்கிறார்” என்றார்கள்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டில் வரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட, தூத்துக்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு, மாப்பிளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமாரை பரிந்துரைத்திருக்கிறார் அனிதா. சரவணக்குமாருக்குப் போட்டியாக, அம்புரோஸ் என்பவர் களமிறங்கியிருக்கிறார். இளைஞரணி துணை அமைப்பாளரான ஜோதிராஜா என்பவரின் ஆதரவுடன் களம் புகுந்திருக்கும் அம்புரோஸ், சரவணக்குமார் மீது ‘பசை’ விவகாரப் புகார்களைப் பட்டியலிடுவதால், பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அதேபோல, வைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு, அனிதாவின் வலதுகரமான உமரிசங்கரின் தம்பி கோட்டாளத்தைக் களமிறக்கியிருக்கிறார். ‘மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களையும், பசையானவர்களையும் மட்டுமே பதவியில் அமர்த்தத் துடிக்கிறார் அனிதா’ என அமைச்சரைச் சுற்றிப் புகார்கள் வட்டமடிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில், கட்சி செயல்பாட்டில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத முருகவேல் என்பவருக்கு, தன் உறவினர் என்கிற அடிப்படையில் கோலியனூர் ஒன்றியச் செயலாளர் பதவியை அளிக்கத் தீர்மானித்திருக்கிறாராம் அமைச்சர் பொன்முடி. ஆனால், வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது என்பதால், முருகவேலை ஒன்றியச் செயலாளராக அமர்த்துவதற்கு, விழுப்புரம் தி.மு.க எம்.எல்.ஏ லட்சுமணன் தடைபோடுவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கீழ்மட்ட அரசியலில், லட்சுமணன் - பொன்முடி மோதலாக உருவாக ஆரம்பித்திருக்கிறது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தரணிவேந்தன், தனக்கு எதிராகச் செயல்படும் ஒன்றியச் செயலாளர்களை மாற்றுவதற்கு முனைப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சென்றதும், நிர்வாகிகளை அழைத்துப் பேசிய அமைச்சர் வேலு, “கடந்த 10 வருஷமா ஒன்றியச் செயலாளர் யாரும் பெருசா பலன் அடையலை. நம்ம ஆட்சி வந்துடுச்சு. கட்சிக்காக உழைச்சவங்க யாரையும் புறக்கணிக்க வேண்டாம். ஏற்கெனவே இருந்தவங்களே அந்தந்தக் கட்சிப் பொறுப்புல இருக்கட்டும்” என்றிருக்கிறார். அதேநேரம், தரணிவேந்தனையும் அழைத்துக் கடுகடுத்துவிட்டாராம்.

மதுரை மாவட்ட மாநகரச் செயலாளர் பொன்.முத்துராமலிங்கமும், புறநகர் மாவட்டச் செயலாளர் மணிமாறனும், ‘காந்தி சிரித்தால் மட்டுமே கட்சிப் பதவி’ எனக் கூறுவதாக நிர்வாகிகள் மத்தியில் குமுறல் எழுந்திருக்கிறது. தன் சமூகம் சார்ந்த நபர்களுக்கே பொறுப்புகளை வழங்க அமைச்சர் பி.மூர்த்தி மெனக்கெடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டை ஒன்றியத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் சபாநாயகர் அப்பாவு, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் இடையே மோதல் நிலவுவதால், திருநெல்வேலியில் ‘திகுதிகு’ காட்சிகள் அரங்கேறுகின்றன.

‘கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்ட நடத்தப்படும் உட்கட்சித் தேர்தலில், காந்தியின் சிரிப்பும், சாதிய உணர்வும்தான் மேலோங்க ஆரம்பித்திருக்கின்றன. கட்சிப் பதவி கிடைக்காதவர்களுக்குக் கூட்டுறவு சங்கத்திலாவது பதவி வழங்கி, அவர்களைச் சாந்தப்படுத்தத் திட்டமிட்டார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், கூட்டுறவு சங்கத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என்பதால், அவரது திட்டமும் தொங்கலில் இருக்கிறது. ஸ்டாலின் பாடு திண்டாட்டம்தான்’ என்கிறார்கள் உடன்பிறப்புகளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism