Published:Updated:

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பு இங்குவந்து சபதம் போட்டுவிட்டுச் சென்ற சசிகலா, நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்தார்.

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பு இங்குவந்து சபதம் போட்டுவிட்டுச் சென்ற சசிகலா, நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்தார்.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

அ.தி.மு.க-வின் பொன்விழா கொண்டாடப்படும் நிலையில், “நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்” என்று பேசி மீண்டுமொரு அரசியல் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார் சசிகலா. நான்கரை வருடங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு அவர் சென்றதே ஒரு அரசியல் ட்விஸ்ட்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அ.தி.மு.க முறைப்படி உதயமானது அக்டோபர் 17, 1972-ல்தான் என்றாலும், அதற்கு முதல்நாளே அனகாபுத்தூர் ராமலிங்கம் தொடங்கியிருந்த அந்த இயக்கத்தில் தன்னை உறுப்பினராக எம்.ஜி.ஆர் இணைத்துக்கொண்டார். இதைக் கணக்கில் வைத்துதான், அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு சசிகலா சென்றதாகச் சொல்கிறார்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க கொடிகளுக்கு நிகராக, அ.ம.மு.க கட்சிக் கொடிகளும் பறந்தன. வழக்கமான போலீஸ் பாதுகாப்பே போடப்பட்டிருந்தது. நினைவிடத்திற்குள் ஓரிரு காக்கிகள் மட்டுமே தென்பட்டார்கள். மற்றபடி, சசிகலா ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில்தான் அன்றைய தினம் நினைவிடங்கள் இருந்தன. ஜெயலலிதா சமாதியின் வாசல் வரை சசிகலாவின் கார் வந்தது. கடுமையான தள்ளுமுள்ளுக்கிடையே காரை விட்டு இறங்கிய சசிகலா, 20 அடி தூரத்தைக் கடந்து, சமாதிக்கு அருகில் வருவதற்கே 21 நிமிடங்கள் ஆகின. கும்பல் நெருக்கியடித்ததால், சசிகலாவுடன் வந்தவர்கள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்குள் திண்டாடிவிட்டனர்.

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்பு இங்குவந்து சபதம் போட்டுவிட்டுச் சென்ற சசிகலா, நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்தார். சசிகலாவிடம் கூடை நிறைய ரோஜா இதழ்களை நீட்டினார் அ.ம.மு.க மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தமிழன். மலரஞ்சலி செலுத்திய சசிகலா, அங்கேயே சிறிது நேரம் நின்றார்.

அடுத்து எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா. நினைவிடத்திற்குப் பத்தாயிரம் பேர் திரளுவார்கள் என சசிகலா தரப்பு எதிர்பார்த்தது. ஆனால், வந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டாதது சசிகலாவை ஒருவகையில் அப்செட் ஆக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும், அண்ணா சமாதியில் மலரஞ்சலி செலுத்திவிட்டு அவர் வீட்டுக்குப் புறப்படும்போது, கூட்டத்தின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழே சுருங்கிவிட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகளிடம், “கூட்டத்தைத்தான் உருப்படியா திரட்ட முடியல. அட்லீஸ்ட் ஒழுங்குபடுத்தியாவது இருக்கலாமே. கொரோனா நேரத்துல இப்படியா முட்டி மோதிப் போறது?” என்று வெடித்துத் தீர்த்தார் விவேக். இந்தக் கூட்டத்தோடு அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்கு சசிகலா வந்துவிடுவாரோ என்கிற அச்சத்தில், வளர்மதி, வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, விருகை ரவி, ராஜேஷ் தலைமையில் ஒரு கூட்டம் அ.தி.மு.க தலைமைக் கழகத்தைக் காப்பதற்கு ரவுண்டு கட்டி அமர்ந்திருந்ததுதான் காமெடி.

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

அடுத்த நாள் அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லம் சென்ற சசிகலா, அ.தி.மு.க கொடியை ஏற்றியும், ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்தும் வைத்தார். எம்.ஜி.ஆரின் வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம், அவரின் வளர்ப்பு மகள் லதா ராஜேந்திரனின் குடும்பத்தினர் சசிகலாவிடம் விளக்கிக் கூறினர். எம்.ஜி.ஆர் பயன் படுத்திய கார் பற்றி ஆர்வமாக விசாரித்த சசிகலா, காருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். அடுத்ததாக, ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்ற சசிகலா, அ.தி.மு.க பொன்விழா மலரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சிலர், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றனர். ‘அந்த இரண்டு பேருல ஒருத்தர் எப்ப வேண்டுமானாலும் நம்ம பக்கம் வந்துடுவாரு’ என்று ஒரு பேச்சாளர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு மறைமுகமாகச் சொன்னதை, கண்கள் மிளிர புன்னகையுடன் ரசித்தார் சசி. கடைசியாக மைக் பிடித்த சசிகலா, “யாரையும் நாம் தரக்குறைவாகப் பேச வேண்டாம். நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்திருந்தபோதுகூட, கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட்டுத்தான் நான் சென்றேன். இந்த நேரத்தில் நமக்குத் தேவை ஒற்றுமை. நீர் அடித்து நீர் விலகாது” என்றார். அ.தி.மு.க தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக சமாதானத் தூதுதான் இது. ஆனால், இதையெல்லாம் அ.தி.மு.க தலைவர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. விழுப்புரத்தில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அ.ம.மு.க-வையே சசிகலாவால் நிலைநிறுத்த முடியவில்லை. அவர் அ.தி.மு.க-வைக் காப்பாற்றப்போகிறாரா?” என்று வெடித்திருக்கிறார்.

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

சண்முகம் சொல்வது ஒருவகையில் யோசிக்க வேண்டியதுதான். ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றபோது சரிக்கு சமமாக இருந்த அ.ம.மு.க கொடிகள், எம்.ஜி.ஆரின் நினைவில்லத்திற்கு அவர் சென்றபோது எங்கும் தென்படவில்லை. ‘யாரும் நம்ம கட்சிக் கொடியுடன் அவங்க நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம்’ என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தடைபோட்டதே அதற்குக் காரணமாக முன்வைக்கப்பட்டது. தினகரனையே சமாதானப்படுத்த முடியாத சசிகலா, அ.தி.மு.க தலைவர்கள் சமாதானமாகி தன் தலைமையின் கீழ் வரவேண்டுமென்று நினைப்பது, பலிக்குமா?

இதற்கிடையே, பொன்விழாவையொட்டி அ.தி.மு.க தரப்பிலும் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. ‘சசிகலாவுக்குக் கூடிய கூட்டத்தைவிட அதிகம் நாம் கூட்ட வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதை, கட்சி நிர்வாகிகள் காதில் வாங்கிக் கொள்ளவில்லைபோல. ஜெயலலிதா சமாதிக்கு அ.தி.மு.க தலைவர்கள் அஞ்சலி செலுத்த வந்தபோது, இரண்டாயிரத்திற்கும் குறை வானவர்களே குழுமியிருந்தார்கள். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் ஒரே காரில் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பெண் நிர்வாகி ஒருவர், ‘‘பாருங்கண்ணா! எல்லாரும்தான் சம்பாரிச்சாங்க, உங்களை மட்டும் ஏன் தி.மு.க-காரங்க கட்டம் கட்டுறாங்க? மத்தவங்க எல்லாம் அன்டர் ஸ்டான்டிங்ல போயிட்டு இருக்காங்கண்ணா...’’ எனச் சொல்ல, என்ன ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் தங்கமணி நெளிந்தார்.

கரைசேரப் போவது யார்? - களைகட்டாத பொன்விழா...

கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்க வேண்டிய அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு, பல்வேறு குழப்பங்களால் சூழ்ந்திருக்கிறது. இருதரப்பும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தொண்டர்கள் சுயமாக வரவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் சோர்ந்து போயிருப்பதை உணர முடிகிறது. கட்சி தொடங்கியதிலிருந்து, 33 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த ஓர் இயக்கம், இன்று தள்ளாடுகிறது. வழக்குகள், தோல்விகள் எனப் பல்வேறு குழப்பங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், அந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் ஆண்டாக இந்தப் பொன்விழா ஆண்டு அமைய வேண்டுமென்பதே அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பு.