Published:Updated:

`மன்னராகும் மூன்றாம் சார்லஸ்'... 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழா - என்ன ஸ்பெஷல்?!

ராணி எலிசபெத்- மன்னர் சார்லஸ்

மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரிட்டனில் வெகு ஜோராக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முடிசூட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:

`மன்னராகும் மூன்றாம் சார்லஸ்'... 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழா - என்ன ஸ்பெஷல்?!

மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரிட்டனில் வெகு ஜோராக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முடிசூட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

ராணி எலிசபெத்- மன்னர் சார்லஸ்

பிரிட்டனை 70 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்த இரண்டாம் எலிசபெத் ராணி கடந்த ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் இயற்கை எய்தினார். அதற்குப் பிறகு, இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றாலும், அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை. இந்த நிலையில், முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரிட்டனில் வெகு ஜோராக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முடிசூட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்
மன்னர் சார்லஸ் - ராணி எலிசபெத்
ட்விட்டர்

தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வண்டி!

1953-ம் ஆண்டு, ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அவரின் மறைவுக்குப் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டுமொரு பிரமாண்ட முடிசூட்டு விழாவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இங்கிலாந்து. மே 6-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு 2,000-க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூகக் குழுக்களைச் சேர்ந்த 850 பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த 850 தன்னார்வலர்களும் `பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்' வென்றவர்கள். இவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான மஞ்சு மல்ஹியும் ஒருவர். இவர் கொரோனா காலத்தில் சிறப்பான சேவையாற்றியதற்காக, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடமிருந்து பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ்

மே 6-ம் தேதி காலையில், மன்னர் மூன்றாம் சார்லஸும், அவரின் மனைவி ராணி கமிலாவும், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருவார்கள். அதுவும் தங்க முலாம் பூசப்பட்ட குளிர்சாதன வசதிகொண்ட குதிரை வண்டியில் வருவார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்தை ஆண்ட மன்னர், 700 ஆண்டுக்காலமாகப் பயன்படுத்திய தங்க முலாம் பூசப்பட்ட அரியாசனம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. அந்த சிம்மாசனத்தில், பிரிட்டன் ராஜவம்சத்துக்குச் சொந்தமான செங்கோலை ஏந்தியபடி மன்னர் சார்லஸ் அமர்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை தெரிவிக்கிறது.

கோஹினூர் வைர கிரீடத்தை அணிவாரா சார்லஸ்?

அந்த அரியாசனத்தில் மன்னர் சார்லஸ் அமர்ந்த பிறகு, அவருக்கு மதகுருமார்கள் ஆசீர்வாதம் செய்வார்கள். பின்னர், புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லஸுக்குச் சூட்டப்படும். இதையடுத்து பக்கிங்ஹாமுக்கு திரும்பும் சார்லஸ், அரண்மனையில் பால்கனியிலிருந்து அங்கு கூடி நிற்பவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றுவார். அன்றைய தினமே கமிலாவும் பிரிட்டன் அரசின் ராணியாக முறைப்படி முடிசூடிக்கொள்வார்.

சார்லஸ் முடிசூட்டு விழா தினத்தன்று, கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணிவாரா என்ற கேள்வி பலர் மத்தியிலும் இருந்துவந்தது. இந்த நிலையில், புனித எட்வர்டின் கிரீடம்தான் சார்லஸுக்குச் சூட்டப்படுமென பக்கிங்ஹாம் அரண்மனையே அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.

நாட் மை கிங்
நாட் மை கிங்

கடும் எதிர்ப்பு?

சார்லஸின் முடிசூட்டு விழாவைக் காண இங்கிலாந்து மக்கள் பலரும் ஆர்வத்துடன் இருந்தாலும், ஒரு பகுதி மக்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர். ``நவீன சமுதாயத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கும் குடியரசாகப் பிரிட்டன் மாற வேண்டும்’’ என்று பலரும் அரச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றனர். `நாட் மை கிங்' என்ற பதாகைகள் ஏந்தி சார்லஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க, பலரையும் இங்கிலாந்து காவல்துறை கைதுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த எதிர்ப்புகளை மீறி முடிசூட்டு விழாவைப் பிரிட்டன் அரசு எப்படி நடத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!