Published:Updated:

ரெய்டில் சிக்காத வேலுமணி & கோ- வின் கேரளா பண்ணை வீடு! - நேரடி ரிப்போர்ட்

வேலுமணி & கோ பண்ணை வீடு
வேலுமணி & கோ பண்ணை வீடு

கேரளாவிலுள்ள வேலுமணி & கோ பண்ணை வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. எங்கே இருக்கிறது அந்த வீடு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தினர். கோவையில் 42 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் ரெய்டு நடந்தது. கோவை கே.சி.பி நிறுவனம் சம்பந்தப்பட்ட மூன்று இடங்களில் நேற்றும் ரெய்டு தொடர்ந்தது.

வேலுமணி
வேலுமணி
“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

ஆனால், வேலுமணி சம்பந்தப்பட்ட ஓர் இடத்தில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. அது மிகவும் ரகசியமான இடம் என்று நமக்கு பிரேத்யகமாக ஒரு தகவல் கிடைத்தது.

தமிழ்நாடு – கேரளா எல்லையான ஆனைக்கட்டி அருகே வேலுமணியும், அவருக்கு நெருங்கியவர்களு அடிக்கடி வந்து செல்லும் பிரமாண்டமான பண்ணை வீடு இருக்கிறது என்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு நேரில் செல்ல முடிவெடுத்தோம். எல்லையில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்து கேரளாவுக்குள் நுழைந்தோம்.

கேரளா பண்ணை வீடு மின்வேலி தடுப்பு
கேரளா பண்ணை வீடு மின்வேலி தடுப்பு

கேரள மாநிலத்துக்குள்தான் அந்தப் பண்ணை வீடு இருக்கிறது. எல்லையைக் கடந்ததும் சற்று தூரத்துக்கு மலையில் ஏறுகிறது அந்தப் பாதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிகவும் குறுகலாக, மேடும் பள்ளமுமாகச் சென்றது அந்தச் சாலை. சிறிது தூரத்தில் மின்சார வேலித் தடுப்புடன் ஒரு பிரமாண்டமான கட்டடம் தெரியவந்தது. அதுதான் அந்தப் பண்ணை வீடு என்று உறுதி செய்ய விசாரணை செய்தோம். அந்தப் பகுதியிலுள்ள சிலரிடம் கேட்டபோது, ``அந்தப் பெரிய வீடுங்களா... அது எஸ்.பி.வேலுமணி வீடு. மந்திரி வீடு...

வேலுமணி & கோ கேரளா பண்ணை வீடு
வேலுமணி & கோ கேரளா பண்ணை வீடு

அடிக்கடி குடும்பத்தோட வருவாருங்க” என்றனர். வீக் எண்ட், பண்டிகை நாள்களில் வேலுமணி மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் குடும்பத்துடன் அங்கு செல்வார்கள்.

இந்தத் தகவல் கோவையிலிருக்கும் வேலுமணியின் நெருங்கிய வட்டாரங்களுக்கும் கட்சியினருக்கும் நன்கு தெரியும். பல முக்கிய விஷயங்கள் அங்குதான் நடந்துள்ளன.

வேலுமணி & கோ கேரளா பண்ணை வீடு
வேலுமணி & கோ கேரளா பண்ணை வீடு

அந்தப் பண்ணை வீட்டில் பல ரகசியங்கள் பொதிந்துள்ளன” என்கின்றனர் அந்தப் பண்ணை வீட்டை நன்கு அறிந்த சிலர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு