Published:Updated:

சென்னை: நகரும் படிக்கட்டு, மின் தூக்கி... தி.நகரில் நீளமான ஆகாய நடை மேம்பாலம்! | Spot Visit | Video

ஆகாய நடை மேம்பாலம்

இந்த மேம்பாலம் சுமார் 28 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. 570 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டது.

Published:Updated:

சென்னை: நகரும் படிக்கட்டு, மின் தூக்கி... தி.நகரில் நீளமான ஆகாய நடை மேம்பாலம்! | Spot Visit | Video

இந்த மேம்பாலம் சுமார் 28 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. 570 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டது.

ஆகாய நடை மேம்பாலம்

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஆகாய மேம்பாலத்தை இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னையில் மக்கள் கூட்டத்துக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் போன‌ இடங்களில் ஒன்றுதான் தியாகராய நகர். அங்கிருக்கும் கடைவீதியில் காலை, மாலை என‌ இல்லாமல் எல்லா நேரங்களிலும் மனிதக் கூட்டங்களை அலை அலையாகக் காண‌ முடியும். ஏராளமானோர் தினமும் வந்து செல்லும்‌ பாதை. எனவே, எப்போதும் சற்று போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.

இந்த நிலையில், நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 2020-ல் தொடங்கப்பட்டது. கொரோனாவால் பணிகள் சற்று தொய்வடைந்த போதிலும், கடந்த ஓராண்டில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்று ‌பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இதன் மூலம் வெறும் ஐந்தே நிமிடத்தில், ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்குச் சென்றுவிட முடியும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த மேம்பாலம் சுமார் 28 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. 570 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டது. பயணிகளின் வசதிக்காக தி.நகர் பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் நகரும் படிக்கட்டும், மாம்பலம் ரயில் நிலையம், உஸ்மான் சாலைப் பகுதியில் தலா ஒரு‌ லிஃப்ட்டும் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர‌ நாற்காலி வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. பயனாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் கண்காணிப்பு கேமராக்களும், தீயணைப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. சுத்தமான சூழலைப் ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும், அழகுக்காக இருபுறமும் வரிசையாக செடித் தொட்டிகளும், வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மேம்பாலத்தினால் தினமும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள்‌ எனக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர் என‌ எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பாதசாரிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே. வியாபாரிகள் கடை போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அருகிலேயே மாம்பலம் காவல் நிலையம் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு மேலும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள் சிலர்.