இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பிரதமர் ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்து, மக்கள் ராஜபக்சேவின் வீட்டை எரித்தனர். அதையடுத்து, அலரி மாளிகையிலிருந்து மகிந்த ராஜபக்சேவும், அவரின் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படைத் தளத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில்,``இலங்கையில் பிரதமரின் வீடே எரிக்கப்பட்டிருக்கிறது. எம்.பி-க்கள் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காட்ட தகுதியானவர்கள் அல்ல. நமது அண்டைநாடு மற்றுமொறு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது'' என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism