Published:Updated:

``தமிழக அரசின் செயல்பாடுகள், மதிப்பெண் போடும் நிலையில் இல்லை” - டாக்டர் கிருஷ்ணசாமி காட்டம்

செய்தியாளர் சந்திப்பு

`தமிழக அரசின் செயல்பாடுகள் மதிப்பெண் போடும் நிலையில் இல்லை’ என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``டிசம்பர் 15-ம் தேதி புதிய தமிழகம் வெள்ளிவிழாவை முன்னிட்டு சிறப்பு மாநில மாநாடு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெறுகிறது. இந்துக்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் வகையில் இந்த மாநில மாநாட்டில் அனைத்துச் சமுதாய மக்கள், இந்து அமைப்புகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழக அரசின் செயல்பாடு மதிப்பெண் போடும் நிலையில் இல்லை. அதேவேளையில், ஆட்சி இருப்பதால் அதிகாரத்தைவைத்து என்னுடைய அரசியலை முடக்க நினைத்தால் அது வெற்றி பெறாது. `மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் இனி ஆட்சி அமைக்க முடியும்’ என மம்தா பானர்ஜி சொல்வது அரசியல் உள்ளார்ந்த நோக்கம்கொண்டது. பிரிவினைவாதத்தின் வேறு வடிவமாகவேதான் இதைப் பார்க்கிறேன். ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க-வினர் மனு கொடுத்தது பற்றி இப்போது பதில் கூற விரும்பவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடுகள் உள்ளன" என்றார்.