Published:Updated:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது!

ஸ்டாலின்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்

Published:Updated:
ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலின் காரணமாகக் கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, திருமண நிகழ்வுகள் மற்றும் துக்க நிகழ்வுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் கலந்துகொள்ள வேண்டும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.

இந்த நிலையில், இந்தத் தொடர் கட்டுப்பாடுகளின் காரணமாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் கட்டுக்குள்வந்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாகவும், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்துசெய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெறும். கொரோனா சிகிச்சை மையமாகச் செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்துக் கல்லூரிகளும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் ரத்து செய்யப்படுகின்றன" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism