Published:Updated:

மதுரை: `ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்!'- எடப்பாடி பழனிசாமி

``ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார். எங்களுக்கும் கண்டுபிடித்துக் கூற வேண்டும். நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை. மக்களைத்தான் நம்புகிறோம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஜான்சிராணி பூங்கா பகுதியில் ரூ 2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புராதன சின்னங்கள் விற்பனை அங்காடி மையக் கட்டடப் பணிகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
மதுரை: `அமைச்சரே இப்படிச் சொல்லலாமா?’- சர்ச்சையான செல்லூர் ராஜூவின் `முகக்கவசம்’ கருத்து

தொடர்ந்து பத்திரிகையாளர்களை அமைச்சர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ``மதுரையில் சுற்றுலாத்துறை மூலம் நமக்கு வருமானம் அதிகம் கிடைக்கிறது. 2 கோடி ரூபாய் மதிப்பில் புராதன சின்னங்கள் விற்பனைக்கூடம் கட்டப்பட்டுவருகிறது. கழிவுநீர் சுத்தம் செய்யும் அதிநவீன கருவிகள் ரூ.18 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கின்றன.

`ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஐந்து ஆண்டுகளில் முடிவடையும்’ என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. திட்டப் பணிகள் இரண்டாவது கட்டத்தில் உள்ளன. ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மதுரை புதுப்பொலிவு பெறும். திட்டத்தைக் கொண்டுவந்தது நாங்கள் என்பதால், நாங்கள் ஆட்சியில் இருக்குபோதே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம்’’ என்றார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

`` `ஆறு மாதங்களில், தி.மு.க ஆட்சி வந்துவிடும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறாரே’’ என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல; இனி பேச வேண்டாம்!’ - ஹெச்.ராஜா

அதற்கு, ``தமிழக எதிர்க்கட்சித் தலைவர், மக்கள்மீது நம்பிக்கை இல்லாமல், ஜோசியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மக்களுடைய நம்பிக்கையை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும். மக்கள் நினைத்தால்தான் யாரும் முதலமைச்சராக இருக்க முடியும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு, சென்னை செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால், பல்வேறு பலன்களைத் தற்போது தமிழகம் பெற்றுவருகிறது. அரசு கூறும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

எம்.பி பாலசுப்பிரமணியனின் மாற்றுக் கருத்துக்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும். மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பஞ்சாபில், இந்த மசோதாவால், இடைத்தரகர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அங்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்” என்றார்.

`வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`ஆட்சி மாற்றம் வரும்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார். எங்களுக்கும் கண்டுபிடித்துக் கூற வேண்டும். நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை. மக்களைத்தான் நம்புகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு