Published:Updated:

உத்தரப்பிரதேசம்: காசியில் பாரதியார் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

பாரதியார் சிலை திறப்பு ( ட்விட்டர் )

பாரதியார் தங்கி இருந்த இடத்தில் 2.5 அடி உயரம் கொண்ட மார்பளவு பாரதியார் சிலை 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம்: காசியில் பாரதியார் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

பாரதியார் தங்கி இருந்த இடத்தில் 2.5 அடி உயரம் கொண்ட மார்பளவு பாரதியார் சிலை 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

Published:Updated:
பாரதியார் சிலை திறப்பு ( ட்விட்டர் )

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிசம்பர் 11-ம் தேதி பிறந்த பாரதியார், தனது கவிதைகள், பாடல்கள் மூலம் மக்களிடம் விடுதலை உணர்ச்சி ஏற்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர். பாரதியார் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சில ஆண்டுகள் உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தங்கியிருந்தது முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்குதான் அவர் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றறிந்தார். இந்த நிலையில், தமிழக அரசு சார்பில், காசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பாரதியார் நூற்றாண்டு நினைவு மலர் வெளியீடு
பாரதியார் நூற்றாண்டு நினைவு மலர் வெளியீடு
ட்விட்டர்

காசியில் பாரதியார் வாழ்ந்த அந்த இல்லத்தில் இப்போது அவரின் உறவினர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரிய அனுமதி பெற்று, பாரதியார் தங்கி இருந்த இடத்தில் 2.5 அடி உயரம் கொண்ட மார்பளவு பாரதியார் சிலை 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. நேற்றைய தினம் காசியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் மகாகவி பாரதியாரின் மார்பளவு சிலையை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து, பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.