Published:Updated:

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: முதல்வர் போட்ட உத்தரவு... விழாவில் தவிர்க்கப்பட்ட படம்!

இல்லம் தேடிக் கல்வி திட்டம்

முதலியார்குப்பம் விழா பேக் டிராப்-பில் தனது படமோ, தன்னுடைய தந்தையார் படமோ இடம்பெறக் கூடாது என்று முதல்வர் கறாராகச் சொல்லிவிட்டாராம்.

Published:Updated:

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: முதல்வர் போட்ட உத்தரவு... விழாவில் தவிர்க்கப்பட்ட படம்!

முதலியார்குப்பம் விழா பேக் டிராப்-பில் தனது படமோ, தன்னுடைய தந்தையார் படமோ இடம்பெறக் கூடாது என்று முதல்வர் கறாராகச் சொல்லிவிட்டாராம்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், `இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார் குப்பத்தில் அக்டோபர் 27-ம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதற்கு முந்தைய அரசு விழா மேடைகளில் பேக் டிராப்-பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய இருவரின் படங்களும் தவறாமல் இடம்பெற்றுவந்தன. ஆனால், `இல்லம் தேடிக்கல்வி’ திட்ட தொடக்கவிழா மேடையில் இடம்பெறும் வகையில் ரெடி செய்யப்பட்ட பேக்-டிராப் மாடலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வரிடம் அதிகாரிகள் காட்டினார்களாம்.

மேடை பேக்-டிராப்
மேடை பேக்-டிராப்

அவர் ஓ.கே சொன்னால்தான், பேக்-டிராப் ரெடியாகும். ஆனால், முதல்வரோ... முதலியார்குப்பம் விழா பேக் டிராப்-பில் தனது படமோ, தன்னுடைய தந்தையார் படமோ இடம்பெறக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். `விளம்பரங்கள் எதற்கு? செயலில் காட்டுவோம்' என்று அதிகாரிகளிடம் முதல்வர் சொன்னாராம். அதன்படியே, பேக்டிராப்-பும் முதலியார் குப்பம் விழா மேடையில் அமைக்கப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் மத்தியிலும் இதற்கு பலத்த வரவேற்பாம்!