Published:Updated:

`குஜராத்தில் நடந்த படுகொலையை இந்தியா இன்னும் மறக்கவில்லை!’ - மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

ஸ்டாலின்.

மோடி, ஒரு பக்கம் பழனிசாமி கையையும், மறுபக்கம் பன்னீர்செல்வத்தின் கையையும் பிடித்துத் தூக்கி காண்பித்தார். 'இரண்டுமே ஊழல் கைகள்' இதற்குத் தானும் உடந்தை என்பதைப்போல காட்டினாரு.

`குஜராத்தில் நடந்த படுகொலையை இந்தியா இன்னும் மறக்கவில்லை!’ - மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மோடி, ஒரு பக்கம் பழனிசாமி கையையும், மறுபக்கம் பன்னீர்செல்வத்தின் கையையும் பிடித்துத் தூக்கி காண்பித்தார். 'இரண்டுமே ஊழல் கைகள்' இதற்குத் தானும் உடந்தை என்பதைப்போல காட்டினாரு.

Published:Updated:
ஸ்டாலின்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தீவனூர் கிராமத்தில், ஐந்தாவதுகட்டமாக தி.மு.க சார்பில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். 10:45 மணி அளவில் வருகைதந்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சில விநாடிகள் மௌன அஞ்சலி செலுத்தினார்.

கூட்ட அரங்கம்
கூட்ட அரங்கம்

அதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``இன்னும் சில வாரங்களில், இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சியின் கதை முடியப்போகிறது. இப்போது இடைநிலை அறிக்கை ஒன்றை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கடன் தொகையை 5,70,000 கோடி ரூபாயாக்கிய கடனாளி அரசுதான் இந்தப் பழனிசாமி அரசு. இப்போ, சுமார் 40,000 கோடிக்கும் மேலான டெண்டர்களைவிட்டு அரசு கஜானாவை காலி பண்ணியிருக்கார் இந்த முதலமைச்சர். நேத்து ஒருத்தர் கோயம்புத்தூர் வந்தார். இப்ப எல்லாம் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பிச்சிட்டார். அவர் பெயர் மோடி. கடந்த முறை வந்தபோது ஒரு பக்கம் பழனிசாமி கையையும், மறுபக்கம் பன்னீர்செல்வம் கையையும் பிடித்துத் தூக்கிக் காமிச்சாரு. `இரண்டுமே ஊழல் கைகள்' இதற்குத் தானும் உடந்தை என்பதைப்போல காட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

90 நாள்களுக்கு மேலாகப் போராடும் விவசாயிகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வேளாண்மையைக் காக்க வந்த நல்ல புருஷரைப்போல பேசிக்கிட்டு இருக்கார். தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரமற்ற முறையில் தி.மு.க-வைப் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க, ஆட்சியின்போது தமிழகத்தில் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் கூறியிருக்கிறார் மோடி. என்ன ஆதாரம் இருக்கிறது அவரிடம். 2002-ல் குஜராத்தில் நடந்த பச்சைப் படுகொலையை இந்தியா இன்னும் மறக்கவில்லையே... குஜராத்தை விட்டுவிட்டு டெல்லிக்குப் போயிட்டா, அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டுவிடுமா...

ஸ்டாலின்
ஸ்டாலின்

மூன்ரு வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளைத் துன்புறுத்திய மோடிக்கு, தி.மு.க-வைக் குற்றம்சாட்ட துளியளவும் உரிமை கிடையாது. இறந்துபோன பல விவசாயிகளின் மரணத்திதுக்கு யார் காரணம்... மக்களை நிம்மதியில்லாமல் ஆக்கியது யார்? கொள்ளையடிப்பதையே தொழிலாகக்கொண்ட பழனிசாமியையும், பாதபூஜை பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பணியவைத்து அப்பாவி அ.தி.மு.க தொண்டர்களின் வாழ்க்கையை பா.ஜ.க-வுக்காக திருடிப்போக வந்திருக்கக்கூடிய மோடிக்கு, தி.மு.க பற்றிப் பேச உரிமையில்லை. இந்திய நாட்டின் அதிகாரத்திலிருக்கும் மோடி அவர்களே, சமீபகாலமாக தமிழகம், புதுவையில் பா.ஜ.க-வில் சேர்ந்துக்கிட்டிருக்காங்களே அவர்களுடைய பின்னணி என்ன என்பதை விசாரிச்சுப் பாருங்க" எனக் கூறி பா.ஜ.க-வில் சேர்ந்துள்ள, குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வாசித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``வாய்க்கு வந்த வார்த்தைகளை தி.மு.க மீது பேசுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நேற்று பேசிய மோடி சொல்கிறார் `ஒரு பெண் தலைவர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா' என்கிறார்.

இதைக் கேட்க ஜெயலலிதா இல்லை. `மாநிலத்தின் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது தமிழகத்தின் இந்த லேடியா, குஜராத்தை சேர்ந்த மோடியா...’ என்று ஜெயலலிதா உரக்கக் கேட்டார். அது இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2016, மே மாதம் 7-ம் தேதி நீங்கள் பேசினீர்களே, மறந்துட்டீங்களா.. மோடி அவர்களே, `குழந்தை குடிக்கும் பால் முதல் பெரியவர் குடிக்கும் மதுபானம் வரை ஊழல் செய்தது ஜெயலலிதா. ஊழலிலே, ஊழல் செய்யும் ஊழல் ஆட்சிக்குச் சொந்தக்காரர் ஜெயலலிதா’ என்று அமித் ஷாவும் மதுரையில் பேசினார். இப்போது அந்த ஜெயலலிதா இறந்துபோய்விட்டதால் அவருடைய படத்துக்கு பூ அள்ளிப்போட்டு, அ.தி.மு.க கட்சித் தொண்டர்களை ஏமாற்ற, ஏப்பம்விட வந்திருக்கிறார் மோடி. இந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டணியை மக்கள் அறிவார்கள். ஏமாற மாட்டார்கள்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism