Published:Updated:

`சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்... 8 மாதங்களில் ஆளுங்கட்சி!’ -தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் ( வி.ஶ்ரீனிவாசுலு )

ஸ்டாலின், `தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன்’ என்றார். ஸ்டாலின் தன்னைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு துரைமுருகன் ஆனந்தக் கண்ணீர்விட்டார்.

`சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்... 8 மாதங்களில் ஆளுங்கட்சி!’ -தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின், `தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன்’ என்றார். ஸ்டாலின் தன்னைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு துரைமுருகன் ஆனந்தக் கண்ணீர்விட்டார்.

Published:Updated:
தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் ( வி.ஶ்ரீனிவாசுலு )

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 67 இடங்களிலிருந்து காணொளி வாயிலாக சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்
தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்
வி.ஶ்ரீனிவாசுலு

`விவசாய விரோதக் கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’, `கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் படுதோல்வியடைந்த அ.தி.மு.க அரசுக்குக் கண்டனம்’, `ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு பலிகளுக்கு நீதி வேண்டும்’... உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க-வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தி.மு.க சட்டவிதி 17(3)-ன்படி, க.பொன்முடியும் ஆ.ராசாவும் துணை பொதுச் செயலாளர்களக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

துரைமுருகன் வேட்புமனுவை 218 நபர்களும், டி.ஆர்.பாலுவின் வேட்புமனுவை 125 பெரும் வழிமொழிந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்

``கட்சியில் மிகவும் புகழ்வாய்ந்த தலைவர்கள் பெற்றிருந்த பொறுப்பு, தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அளவுக்கு என்னால் உழைக்க முடியுமா என்று தெரியாது” என்றார் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர். பாலு.

தொடர்ந்து, ``தேர்தலைச் சந்திக்க நம்மிடம் வீரம் இருக்கிறது, வீரம் மட்டும் போதாது, நிதியும் வேண்டும். அனைவரும் நிதியை வாரி வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

துரைமுருகன், மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு
துரைமுருகன், மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு
வி.ஶ்ரீனிவாசுலு

``பழைமையையும் விட்டுவிடாமல், கழகத்தின் அடிப்படைக் கொள்கையிலிருந்து சிறிதளவுகூட மாறுபட்டுவிடாமல் இந்த இயக்கத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கு ஒலிக்கக்கூடிய முதல் குரலாக இருப்பது ஸ்டாலின்தான்” என்றார் கனிமொழி. மேலும் அவர் புதிதாகப் பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுக்குழுவில் முதன்முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ``புதிதாகப் பதவியேற்றிருப்பவர்களை வாழ்த்த வயதில்லை. அவர்களின் வழி நடப்போம். இந்த ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் தலைவர் ஸ்டாலினுக்குத்தான் ராயல்டி தர வேண்டும். அவர் ஒரு பொதுக்குழுவையே காணொளி மூலம் நடத்திக்கொண்டிருக்கிறார். இளைஞர் அணிக்குக் கட்டளையிடுங்கள்... செய்து முடிக்கக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
வி.ஶ்ரீனிவாசுலு

பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், ``கொரோனா காரணத்தால் ஐந்து மாதங்களுக்குப் பிறகு காணொளி வாயிலாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதவிக்குப் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களில் ஒருவர்தான். அண்ணன் துரைமுருகன் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சியிலிருக்கிறேன். என் உற்றதுணையாக இருப்பவர் துரைமுருகன். தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன்” என்றார். ஸ்டாலின் தன்னைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு துரைமுருகன் கண்ணீர்விட்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ``கலைஞருக்கு ஒரு பிரச்னை என்றால் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தவர் டி.ஆர்.பாலு. பெரும் தலைவர்கள் வகித்த பொறுப்பு இன்று உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. தற்போது ஆளும் ஆட்சி எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஊழல் அதிகரித்து காணப்படுகிறது. உங்கள் அனைவரின் ஆசை இன்னும் எட்டு மாதங்களில் நிறைவேறும். இன்னும் எட்டு மாதங்களில் ஆளுங்கட்சியாக தி.மு.க மாறும் ' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism